வவுனியா மாவட்டத்தில் 1305 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் இணைப்பை வழங்குவதற்காக இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் 156 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா செலவிலான வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு.
மக்கள் நீண்ட காலமாக சுத்தமான குடிநீர் இன்றி படும் கஷ்டங்களை உணர்ந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான் அவர்கள் சுத்தமான குடிநீரை வழங்குவது தொடரான முயற்சிகளை மேற்கொண்டார்.
வட மாகாணத்தில் சுத்தமான குடிநீர் இன்றி சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இதன் பலனாக வவுனியா மாவட்டத்தில் சுமார் 1305 பயனாளிகளுக்கு சுத்தமான குடிநீர் இணைப்பை வழங்கும் வேலை திட்டத்துக்கு அமைய வவுனியா ஈஸ்வரிபுரம் பகுதியை சேர்ந்த சுமார் 200 பயனாளிகளுக்கான குடிநீர் வினிகத் திட்டத்தை அண்மையில் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.