GOAT 2nd Single: "இந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது!" – பவதாரிணியின் குரல் குறித்து யுவன்

இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் முதல் பாடல் ‘விசில் போடு’ ஏற்கெனவே வெளியாகிவிட்டது. தற்போது விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இரண்டாவது பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் வெளியாகி இருக்கிறது. AI தொழில்நுட்பம் மூலமாக யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தில் தனது சகோதரி பவதாரிணியின் குரலைப் பயன்படுத்தி இந்தப் பாடலை உருவாக்கியுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

‘சின்ன சின்ன கண்கள்’ பாடல்

இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் யுவன் சங்கர் ராஜாவே ட்விட்டரில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அந்தப் பதிவில், “‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் இரண்டாவது பாடல் எனக்கு மிகவும் நெருக்கமானது. இந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

பெங்களூரில் இந்தப் பாடலை நாங்கள் இசையமைத்தபோது இந்தப் பாடல் என் அக்காவிற்கானது என்று நான் உணர்ந்தேன். அந்த நேரத்தில் அவர் குணமாகிவிடுவார். அவருடைய குரலில் பதிவு செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால், ஒரு மணி நேரம் கழித்து அவர் இல்லை என்ற செய்தி கிடைத்தது.

அவருடைய குரலை இப்படிப் பயன்படுத்துவேன் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. எனது இசைக் குழுவினருக்கும், இந்தச் செயலில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு ஆனந்தமும் சோகமும் கலந்த தருணம்!” என்று உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.