இஸ்ரேல் தாக்குதலில் காசாவின் அவசரகால சேவை இயக்குநர் உயிரிழப்பு

டெல் அவில்: காசா நகரில் உள்ள மருத்துவ கிளினிக்கில் இஸ்ரேல் நடத்தியத் தாக்குதலில் காசாவின் ஆம்புலன்ஸ் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் இயக்குநர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய போர் தற்போது வரை நடைபெற்று வருகிறது. அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில் 37,626 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 86,098 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களால் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 ஆக உள்ளது.

இதற்கிடையில், வடக்கு காசாவில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையில் ஊட்டச்சத்து குறைபாட்டால் மேலும் இரண்டு குழந்தைகள் இறந்துள்ளன, பசி, பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். இஸ்ரேல் போர் நீடித்து வரும் நிலையில், காசாவில் 21 ஆயிரம் சிறுவர்கள் காணாமல் போய் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், காசா நகரில் உள்ள மருத்துவ கிளினிக்கில் இஸ்ரேல் நடத்தியத் தாக்குதலில் காசாவின் ஆம்புலன்ஸ் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் இயக்குநர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு இறுதி ஊர்வலமும் நடைபெற்றது. காசாவின் 65 சதவீத சாலைகள் சேதமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் செயற்கைக்கோள் மையம் (UNOSAT) தெரிவித்துள்ளது. சுமார் 1,100 கிமீ (683.5 மைல்கள்) சாலைகள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் இந்த செயற்கைக்கோள் படங்கள் மே 29 அன்று சேகரிக்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.