சென்னை தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் சேவைகள் குறித்து அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ”:பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க திருநெல்வேலி – செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. திருநெல்வேலியில் இருந்து ஆக.13, 18 ஆகிய தேதிகளில் இரவு 10.50 மணிக்கும், மறுமார்க்கத்தில் செங்கல்பட்டில் இருந்து ஆக.14, 19ஆகிய தேதிகளில் மாலை 5.55 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் இதற்கான முன்பதிவு நாளை(ஆக.11) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மேலும் நாகர்கோவில் […]
