சென்னை: ”2026 தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு” என்றும், இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு மாநிலக் கட்சி ஆட்சியை பிடித்த வரலாறு தமிழ்நாட்டுக்குத்தான் சொந்தம் என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறினார். தி.மு.க மாவட்டக் கழகச் செயலாளர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு நடைபெறும் முதல் மாவட்டச் செயலாளர் […]