ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா, பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் `தங்கலான்’.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். கோலார் தங்கச் சுரங்கத்தில் சுதந்திரத்திற்கு முன் மக்கள் சந்தித்த பிரச்னைகளை மையமாகக் கொண்டு ‘தங்கலான்’ திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியானது. மேலும் இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வருகிற 30-ம் தேதி வெளியாகவுள்ளது.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் படக்குழு சார்பில் நன்றி தெரிவிப்பு விழா நடைபெற்றது. அதில் விக்ரம், பா.இரஞ்சித், ஞானவேல் ராஜா, மாளவிகா மோகனன், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய விக்ரம், “இப்படத்தை தெலுங்கில் விநியோகம் செய்த மைத்திரி புரொடக்ஷனுக்கு நன்றி. தெலுங்கில் வரவேற்பைப் பெற்று, மேலும் அதிக தியேட்டரில் திரையிடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படிப்பட்ட நல்ல படத்திலும், நல்ல கதாபாத்திரத்திலும் நடிக்க வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்த பா.இரஞ்சித்துக்கு நன்றி.
#Vikram reveals that #Thangalaan Part-2 will happen very soon and #PARanjith asked him to announce it! pic.twitter.com/0B3MUB3Sl5
— AndhraBoxOffice.Com (@AndhraBoxOffice) August 16, 2024
உங்கள் அனைவருக்கும் ‘தங்கலான்’ படம் மிகவும் பிடித்துள்ளதால், இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும். நீங்கள் இப்படத்திற்குக் கொடுக்கும் அன்பைப் பார்க்கும்போது தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் தொடரலாம்” என்றார்.
இதன் மூலம் ‘தங்கலான்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அதிகாரபூர்வமான தகவலை விக்ரம் கொடுத்திருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.