இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) இன்று தனது 100-வது பயணத்தை குறிப்பிடத்தக்க மைல்கல்லாக எட்டியிருக்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று காலை 6:23 மணிக்கு NVS-02 – செயற்கைகோளை சுமந்து செல்லும் GSLV-F15 ஐ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இந்த ஆண்டு விண்வெளிக்கு இஸ்ரோ அனுப்பிய முதல் விண்வெளிப் பயணமாகவும், சமீபத்தில் இஸ்ரோவின் தலைவராகப் பதவியேற்ற புதிய தலைவர் V.நாராயணனின் கீழ் நடத்தப்பட்ட தொடக்கமாகவும் அமைந்திருக்கிறது.
#100thLaunch:
Congratulations @isro for achieving the landmark milestone of #100thLaunch from #Sriharikota.
It’s a privilege to be associated with the Department of Space at the historic moment of this record feat.
Team #ISRO, you have once again made India proud with… pic.twitter.com/lZp1eV4mmL— Dr Jitendra Singh (@DrJitendraSingh) January 29, 2025
Geosynchronous Satellite Launch Vehicle (GSLV) இந்தியாவின் 17-வது பயணமாகவும், Indigenous Cryo stage-ன் 11-வது பயணமாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்த விண்ணேற்றத்தைக் நேரில் காண மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த சாதனைக்கு இஸ்ரோவை வாழ்த்தி மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், “இந்த சாதனையின் வரலாற்று தருணத்தில் விண்வெளித் துறையுடன் இணைந்திருப்பது ஒரு பாக்கியம். ISRO, GSLV-F15 / NVS-02 மிஷன் வெற்றிகரமாக ஏவப்பட்டு இந்தியாவை மீண்டும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த செயற்கைக் கோள், பூமியிருந்து 36,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புவிசார் சுற்றுப்பாதையில் வைக்கப்படும். இதையும் சேர்த்தால் விண்வெளியில் நமது செயற்கைக் கோளின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்திருக்கிறது. செயற்கைக்கோளிலிருந்து நாம் பெறும் தகவல்களை இது மேலும் துல்லியப்படுத்தும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.