மெரினாவில் சோக சம்பவம்: ராட்சத அலையால் படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் உயிரிழப்பு

சென்னை: மெரினா கடற்பரப்பில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இருவர், ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நடுக்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் பாஸ்கர்(61), ராஜி(35). மீனவர்களான இவர்கள் இருவரும் நேற்று அதிகாலை வழக்கம்போல் ஒரே படகில் மெரினா கடற்பரப்பில் மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில், காலை 7 மணியளவில் இவர்கள் சென்ற படகு மற்றும் வலை ஆகியவை விவேகானந்தர் இல்லம் எதிரே கடற்கரை பகுதியில் தனியாக கரை ஒதுங்கியது. இதைக் … Read more

பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் – மீட்புப் பணிகள் துரிதம்

பிரயாக்ராஜ்: வட இந்தியாவில் இன்று மவுனி அமாவாசை என்பதால் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட அதிகளவில் பக்தர்கள் திரண்டிருந்த நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர். இதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. “புனித நீராடும் சங்கம் காட் பகுதிக்கு அருகே இருந்த தடுப்பு கட்டை உடைந்ததை அடுத்து பக்தர்கள் சிலர் காயமடைந்தனர். அவர்கள் சிகிசிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் குறித்த … Read more

ISRO 100th Mission: விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் '100வது மிஷன்' – இதன் பயன்கள் என்ன?

இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அதன் 100வது ராக்கெட்டை இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. GSLV-F15 வகையான அந்த ராக்கெட் NVS-02 என்ற செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது.

தென் தமிழகத்தில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் நாளை (ஜன. 30) -ம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும். நாளை தென் தமிழகத்தில் சில இடங்கள், வட … Read more

போலீஸாரின் துரித நடவடிக்கையால் ரூ.6 கோடி கேட்டு கடத்தப்பட்ட கர்நாடக மருத்துவர் விடுவிப்பு

கர்நாடகாவில் போலீஸார் துரிதமாக நடவடிக்கை எடுத்ததால் ரூ.6 கோடி கேட்டு கடத்தப்பட்ட மருத்துவர் விடுவிக்கப்பட்டார். கர்நாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்த மருத்துவர் சுனில் குப்தா (45). இவர் நேற்று முன் தினம் காலையில் சூரியநாராயணபுராவில் நடைபயிற்சி மேற்கொண்ட போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்தியது. கடத்தல்காரர்கள் சுனில் குப்தாவின் சகோதரரும் பெல்லாரி மதுபான விற்பனையாளர் சங்கத்தின் தலைவருமான‌ வேணுகோபால் குப்தாவை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டனர். அப்போது, ”உங்களின் சகோதரரை விடுவிக்க வேண்டுமானால் … Read more

திமுக எம் பி கதிர் ஆனந்த் மீண்டும் அமலாகக்த்துறை அலுவலகத்தில் ஆஜர்

சென்னை இன்று திமுக எம் பி கதிர் ஆனந்த் மீண்டும் அமலாக்கத்துறை அலுவல்கத்தில் ஆஜராகி உள்ளார். வேலூர் தொகுதியில் கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டபோது அவர், வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே துரைமுருகனின் வீடு, கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி போன்ற இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அப்போது சோதனை நடத்தினார்கள். மேலும் துரைமுருகனின் நெருங்கிய கட்சி பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசனின் … Read more

No Tax – No WFH | இனி வருமான வரியே கிடையாது! செம்ம குஷியில் மக்கள்.. டிரம்பின் அதிரடி திட்டம்

Donald Trump Latest News: அமெரிக்கர்கள் வருமான வரி கட்ட வேண்டாம். உங்கள் வருமானத்தை நாட்டில் உள்ள பொருட்களை வாங்குவதற்கு செலவிடுங்கள் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை.

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வழக்கு: சென்னை, மயிலாடுதுறையில் 20 இடங்களில் என்ஐஏ சோதனை

தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த விவகாரம் தொடர்பாக சென்னை, மயிலாடுதுறை என தமிழகத்தில் நேற்று சுமார் 20 இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்றது. இதில், ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் சித்தாந்தத்தை ஊக்குவிப்பவர்கள், அந்த அமைப்புக்கு ஆட்களை சேர்ப்பவர்களை என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) தீவிரமாக கண்காணித்து கைது செய்து வருகிறது. இந்நிலையில், தடை செய்யப்பட்ட இந்த இயக்கத்துக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிலர் ரகசியமாக இளைஞர்கள் மற்றும் … Read more

என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி எஃப்-15 இன்று விண்ணில் ஏவப்படுகிறது

நம்நாட்டின் வழிகாட்டுதல் பயன்பாட்டுக்கான என்விஎஸ்-02 செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இன்று (ஜன.29) விண்ணில் செலுத்தப்படுகிறது . அமெரிக்காவுக்கு ‘ஜிபிஎஸ்’ போல, நம்நாட்டில் தரை, கடல் மற்றும் வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்கு உதவும் ‘இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு’ (ஐஆர்என்எஸ்எஸ்) உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது. இதற்காக ஐஆர்என்எஸ்எஸ் வரிசையில் 2013 முதல் 2018-ம் ஆண்டு வரையான காலகட்டங்களில் 8 வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. … Read more

தலித் மக்கள் ஆளுநரின் உரையால் ஏமாற மாட்டார்கள் : திருமாவளவன்

சென்னை ஆளுநரின் உரையால் தலித் மக்கள் ஏமாற மாட்டார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம். “தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மீண்டும், மீண்டும் ஒரு அரசியல்வாதியாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். கவர்னர் என்ற பொறுப்பை மறந்து அவர் பேசுவதும், செயல்படுவதும் தொடர்ந்து நீடிக்கிறது. தலித்துகளை வலதுசாரிகளின் பக்கம் கவர்வதற்காக, குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் தரப்பிற்கு ஈர்ப்பதற்காக அடிக்கடி அவர் தலித்துகளை பற்றியும் பேசுகிறார். தலித் ஒருவர் முதல்வராக … Read more