சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. சென்னையை அடுத்த சுங்குவார் சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் பணிபுரியும் 1000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள், ஊதிய உயர்வு, தொழிற் சங்கத்துக்கு அங்கீகாரம், போனஸ் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 37 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் … Read more

தொழுகை நடத்த திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற வேலூர் இப்ராஹிம் மனைவியுடன் கைது

மதுரை: பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளராக இருப்பவர் வேலூர் இப்ராஹிம். இவரது பிறந்தநாளையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தரிசனம் மற்றும் மலைமேலுள்ள சிக்கந்தர் தர்கா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை மேற்கொள்ள திட்டமிட்டார். இதற்காக தனது மனைவியுடன் நேற்று மதுரை வந்த அவர், பிற்பகலில் மனைவியுடன் காரில் திருப்பரங்குன்றம் நோக்கிச் சென்றார். இந்நிலையில் மதுரை-திருமங்கலம் ரோட்டில் தனக்கன்குளம் அருகே காவல் உதவி ஆணையர் குருசாமி தலைமையில் ஆய்வாளர் மதுரைவீரன் உள்ளிட்ட போலீஸார் இப்ராஹிம் வந்த காரை … Read more

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட விண்கல்லுக்கு பெயர் சூட்டும் இந்திய மாணவர்

புதுடெல்லி: டெல்லி அருகே நொய்டாவில் செயல்படும் ஷிவ் நாடார் பள்ளியை சேர்ந்த தாஷ் மாலிக், நாசாவின் விண்வெளி திட்டத்தில் பங்கேற்று புதிய விண்கல்லை கண்டுபிடித்து உள்ளார். இந்த புதிய விண்கல்லுக்கு நிரந்தர பெயர் சூட்ட மாலிக்குக்கு நாசா அழைப்பு விடுத்திருக்கிறது. தற்போது 9-ம் வகுப்பு படிக்கும் மாலிக் கூறியதாவது: சுமார் 2022-ம் ஆண்டில் நாசாவின் சர்வதேச விண்வெளி ஆய்வு திட்டத்தில் இணைந்தேன். சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆய்வு செய்து புதிய விண்கல்லை கண்டுபிடித்தேன். இந்த விண்கல் தற்போது … Read more

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மாணவர்களுக்கு பரிசு

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குடியரசு தின கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவா மாணவிகளுக்கு பரிசு வழங்கியுள்ளார் இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’சென்னை, காமராசர் சாலையில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில், முதல்ஆர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர், வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், டாக்டர் … Read more

தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற காட்சிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு

மதுரை: ‘தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும்’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை விளாங்குடியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சித்தன், மாடக்குளம் கதிரவன் ஆகியோர் அதிமுக கொடிக் கம்பம் அமைக்க அனுமதி வழங்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி இளந்திரையன் நேற்று உத்தரவு … Read more

மில்கிபூர் இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பாபர் மசூதி வழக்கு மனுதாரர் இக்பால் அன்சாரி ஆதரவு

புதுடெல்லி: மில்கிபூர் இடைத்தேர்தலில், பாபர் மசூதி வழக்கின் மனுதாரர் இக்பால் அன்சாரி பாஜகவுக்கு மீண்டும் ஆதரவளித்துள்ளார். அயோத்யாவின் மில்கிபூர் தொகுதியில் அவர் இன்று பிரச்சாரம் செய்தார். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்யாவிலிருந்த பாபர் மசூதி, கடந்த டிசம்பர் 6, 1992-ல் இடிக்கப்பட்டது. இதை பாஜகவின் தோழமை அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் கரசேவையினர் இடித்திருந்தனர். ராமர் பிறந்த இடமாக கருதப்படும் இங்கிருந்த கோயிலை இடித்து முகலாய மன்னர் பாபர் அப்போது மசூதி கட்டியதாகப் புகார் கூறப்பட்டது. இந்த விவகாரம் … Read more

விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் சுற்றுப்பயண விவரம்

விழுப்புரம் இன்று விழுப்புரம் மாவட்டத்த்ல், முதல்வர் முக  ஸ்டாலின் 2 நாட்கள்  சுற்றுப்பயணம் செல்ல உள்ளார்.. இன்று மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 2 நாட்கள் சுற்றுப்பயணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு வருகிறார். மாவட்ட எல்லையான ஓங்கூர் சுங்கச்சாவடி அருகில் வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் சேகர், தெற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பொன்.கவுதமசிகாமணி ஆகியோர் முன்னிலையில் திமுகவினர் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். வரவேற்பு முடிந்தவுடன் … Read more

கங்கையில் நீராடுவதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியுமா? – பாஜகவை சாடிய கார்கே

போபால், உத்தரபிரதேசத்தில் நடைபெறும் மகா கும்ப மேளாவில் கோடிக்கணக்கானோர் புனித நீராடி வரும் நிலையில், அரசியல் தலைவர்களும் புனித நீராடி வருகின்றனர். அந்த வகையில், மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் புனித நீராடியுள்ளனர். இந்த நிலையில், பாஜக தலைவர்கள் மகா கும்ப மேளாவில் புனித நீராடுவதை விமர்சிக்கும் வகையில், கங்கையில் நீராடுவதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியுமா? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வியெழுப்பியுள்ளார். … Read more

35 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் வெற்றியை பெற்ற வெஸ்ட் இண்டீஸ்

முல்தான், பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்களும், பாகிஸ்தான் 154 ரன்களும் அடித்தன. பின்னர் 9 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளித்து வலுவான இலக்கை நோக்கி பயணித்தது. 66.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் 244 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் … Read more

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.5 ஆக பதிவு

பீஜிங், சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில் கடந்த 7ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், திபெத்தில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 3.03 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு … Read more