அமெரிக்காவை உலகின் முதன்மை நாடாக மீண்டும் கட்டமைக்க வர்த்தகப் போரை அதிபர் டிரம்ப் துவங்கியுள்ளார். இதனால் ஏற்படும் வலிகளை தாங்கிக்கொள்ள அமெரிக்கர்கள் தயாராக இருக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். கனடா, சீனா மற்றும் மெக்ஸிகோ ஆகிய மூன்று நாடுகளுக்கு எதிராக வரிவிதிப்புகளை அறிவித்துள்ள டிரம்ப் இதனால் அமெரிக்காவில் விலைவாசி உயர வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார். இந்த விலைவாசி உயர்வால் ஒவ்வொரு குடும்பமும் சுமார் $830 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 72000) மேலதிகமாக செலவிட நேரிடும் என்று கூறப்படுகிறது. […]
