மதுரை: திருப்பரங்குன்றம் மலைமீது மீண்டும் பிரியாணி என பரவிய போஸ்டர் ‘வதந்தி’ என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை சர்ச்சை விவகாரத்தில், அந்த போஸ்டர் வதந்தி என்றும், அதை பாஜகவே சமூக வலைதளங்களில் பரப்பியது என்றும் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் கண்டறிந்துள்ளது. அதுபோல குறிப்பிட்ட ஜமாத்தும், நாங்கள் அதுபோல போஸ்டர் ஏதும் வெளியிடவில்லை மறுப்பு தெரிவித்து உள்ளது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இஸ்லாமிய அமைப்பினர் வெளியிட்டதாக போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. […]
