20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘சச்சின்’ திரைப்படம் ரீ- ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.
கடந்த 2005 ஆம் ஆண்டு ஜான் மகேந்திரன் இயக்கத்தில், விஜய், ஜெனிலியா, வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சச்சின்’. கலைப்புலி தாணு தயாரித்த இப்படத்திற்குத் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். பெரிய அளவில் வசூல் சாதனை படைக்கவில்லை என்றாலும், இந்தப் படத்திற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

கோடையில் கொண்டாட்டம்❤️#SacheinRerelease
Thalapathy @actorvijay @Johnroshan @ThisIsDSP#Vadivelu @iamsanthanam@geneliad @bipsluvurself#ThotaTharani #VTVijayan#FEFSIVijayan @idiamondbabu@RIAZtheboss #SacheinMovie pic.twitter.com/5x6xYSWsbV
— Kalaippuli S Thanu (@theVcreations) February 11, 2025
இந்நிலையில், ‘சச்சின்’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில், படத்தை ரீ- ரிலீஸ் செய்யப்போவதாகத் தயாரிப்பாளர் தாணு அறிவித்திருக்கிறார். அதன்படி கோடை விடுமுறையில் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு கில்லி திரைப்படம் ரீ ரிலீஸாகி மாபெரும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…