சென்னை: தலைமைச்செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திஷா கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்உள்பட பலர் பங்கேற்றனர். மத்திய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்க, மத்திய அரசு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற முதலமைச்சரை தலைவராகக் கொண்டு திஷா கமிட்டி என்ற பெயரில் குழு அமைக்கப்பட்டது. மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவேற்றும் வகையில், மாநிலத்தின் வளர்ச்சிக்காக நாடாளுமன்றம், […]
