Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்.19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியாக பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதின. அதில் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரின் முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது அந்த அணியின் மீது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது.
இதையடுத்து அந்த அணி நாளை (பிப்.23) இந்திய அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ளும். இந்த நிலையில், தனது யூடியூப் சேனலில் பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், நியூசிலாந்து எதிரான போட்டியில் பாபர் அசாம் ஆமை வேகத்தில் விளையாடியத்தை கடுமையாக விமர்சித்து உள்ளார்.
மேலும் படிங்க: IND vs PAK: பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம்… இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் – ஏன்?
பாபர் அசாமை விமர்சித்த அஸ்வின்
அவர் கூறுகையில், நான் பாபர் அசாமின் மிகப்பெரிய ரசிகன். ஆனால் சில நேரங்களில் கிரிக்கெட் வீரர்கள் தங்களது புகழ் மற்றும் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள விரும்புவார்கள். உங்கள் அணியை விட உங்களது புகழ் முக்கியமா? அந்த போட்டியில் பாபர் அசாமின் ஆட்டத்தை பார்ப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது என்றார்.
அந்த போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 320 ரன்கள் சேர்த்தது. அந்த இலக்கை பாகிஸ்தான் விரட்டிய போது, பாபர் அசாம் 90 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்தார். 81வது பந்தில் தான் அவர் அரைசதத்தை எட்டினார். அவரது இந்த ஆமை வேக ஆட்டம் ரன் ரேட்டின் மீது அழுத்தத்தை அதிகரித்தது. இதனால் அடுத்து அடுத்து வந்த வீரர்களின் மீது சுமை கூடியது. இறுதியில் பாகிஸ்தான் அணி 260 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வி அடைந்தது.
நாட்டுக்காக விளையாடவில்லை
தொடர்ந்து பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், நாட்டுக்காக, தனது அணிக்காக விளையாட வேண்டும். அந்த நோக்கத்தை அவர்களது வீட்டிலேயே வைத்துவிட்டு வந்து விட்டார்களா? அந்த போட்டியில் பாபர் அசாம் அவரது வழக்கமான விளையாட்டை அவர் ஆடவில்லை. அவர் ஸ்கொயர் கட் ஷாட் ஆடவில்லை, ஸ்வீப் அல்லது ரிவர்ஸ் ஸ்வீப் செய்யவில்லை என அவர் எந்த ஷாட்டையுமே ஆடவில்லை. இது போன்ற ஒரு ஆட்டத்தை 90 காலங்களில் கூட யாரும் விளையாடியதில்லை என கடுமையாக விமர்சித்தார்.
மேலும் படிங்க: IND vs PAK: பாகிஸ்தான் போட்டியில் விராட் கோலி செய்தால் போதும்… அஸ்வின் சொன்ன அட்வைஸ் என்ன?