மனைவியை கணவன் தான் எரித்து கொலை செய்தார் என்பதற்கான தகுந்த சாட்சி இல்லாத நிலையில் குடும்பத் தகராறு இருந்ததை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு அவர் கொலை செய்தார் என்று கூறமுடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மகளிர் விரைவு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து வேந்தராஜா என்பவர் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த வேந்தராஜா தனது மகளின் சாவுக்கு மனைவி […]
