சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த பிப்.19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ஏ-வில் இருக்கும் இந்திய அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி இருகிறது. இரண்டிலும் வென்று அரை இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. தற்போது மூன்றாவது லீக் போட்டியாக நாளை மறுநாள் (மார்ச் 02) நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது.
ரிஷப் பண்ட் எந்த இடத்தில் களம் இறங்குவார்
இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என கூறப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என கூறப்பட்டு வருகிறது. அதேசமயம் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் களம் இறங்குவார் எனவும் கூறப்பட்டு வருகிறது.
அப்படி ரிஷப் பண்ட் இறங்கும் பட்சத்தில் அவர் பேட்டிங் வரிசையில் எந்த வரிசையில் இறங்குவார் என்ற குழப்பம் உள்ளது. இது குறித்த தற்போது வரை எவ்வித அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.
மேலும் படிங்க: IPL 2025: இந்த ஆண்டு சேப்பாக்கம் இல்லை! மைதானத்தை மாற்றிய சிஎஸ்கே!
ரிஷப் பண்ட் இந்திய அணியில் மாற்று விக்கெட் கீப்பராக மட்டுமே இருக்கிறார். கே.எல்.ராகுல் முதன்மை விக்கெட் கீப்பராக இருப்பதால் அவரே விக்கெட் கீப்பிங் செய்வார். எனவே ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்ய வாய்ப்பு இல்லை. பேட்ஸ்மேனாக மட்டுமே அவர் அணியில் இடம் பெறுவார்.
ரிஷப் பண்ட் பொதுவாக 5வது இடத்தில் இறங்குவார். தற்போது அக்சர் பட்டேல் அந்த இடத்தில் இறங்கி விளையாடி வருகிறார். இடது கை பேட்ஸ்மேன் என்பதாலேயே அவர் அந்த இடத்தில் இறங்கி வருகிறார். இடது மற்றும் வலது கை காம்பினேஷன் வேண்டும் என்பதாலேயே அக்சர் பட்டேல் 5வது இடத்தில் ஆட வைத்து வருகிறார் தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர்.
ரிஷப் பண்ட் இடது கை பேட்ஸ்மேன் என்பதால் 5வது இடத்திலேயே களம் இறங்குவார். அப்படி ரிஷப் பண்ட் 5வது இடத்தில் களம் இறங்கும் பட்சத்தில் அக்சர் பட்டேல் 7ஆம் இடத்தில் இறக்கப்படுவார். இடையில் உள்ள 6வது இடத்தில் ஹர்திக் பாண்டியா களம் இறங்குவார். ரிஷப் பண்ட் இந்திய அணியில் களம் இறக்கப்படும் நிலையில், பேட்டிங் வரிசை இப்படி இருக்க அதிக வாய்ப்புள்ளது.
கணிக்கப்பட்ட இந்திய அணியின் பிளேயிங் 11: சுப்மன் கில், கே.எல்.ராகுல், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ்
மேலும் படிங்க: விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபியில் செய்யப்போகும் மிகப்பெரிய சாதனை! இதுவரை யாரும் செய்யவில்லை