சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளை ஒடுக்கியதால் முதல் முறையாக வாக்களித்த கிராம மக்கள்

சுக்மா: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் குறைந்ததால், ஒரு கிராம மக்கள் சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக வாக்களித்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இதில் 3-வது மற்றும் இறுதி கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மாவோயிஸ்ட் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த சுக்மா மாவட்டத்தின் கெர்லபெண்டா கிராம மக்கள் சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக வாக்களித்துள்ளனர். இதுகுறித்து கிராமவாசி ஒருவர் கூறும்போது, “இதுவரை நங்கள் தேர்தலில் வாக்களித்ததே இல்லை. முதல் முறையாக … Read more

2026 ஆம் ஆண்டுக்குள் ரயில்வே 100% மின்மயமாக்கப்படும்: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

இந்திய ரயில்வே அடுத்த நிதியாண்டிற்குள் 100 சதவீதம் மின்மயமாக்கப்படும் என்றும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்து வருவதாகவும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்ற அவர் ம.பி. மாநிலத்திற்கும் ரயில்வேக்கும் இடையிலான மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதுவரை, ரயில் பாதையின் 97 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டில் இது 100 சதவீதமாக இருக்கும் என்று அவர் … Read more

வெள்ளியங்கிரி மலையில் ஏற்றப்பட்ட தவெக கொடி அகற்றம்!

கோவை: கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏற்றப்பட்ட தமிழக வெற்றிக்கழக கொடியை வனத்துறையினர் அகற்றினர். கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டி பகுதியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. மகா சிவாராத்திரியை முன்னிட்டு, கடந்த பிப்ரவரி 1-ம் தேதி முதல் 7-வது மலை உச்சியில் சுயம்பு லிங்கமாக உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை பக்தர்கள் மலை ஏறி தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், தவெக கட்சி தொண்டர் ஒருவர் 7-வது மலையில் கட்சி கொடியை ஏற்றிவிட்டு வந்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள்,வீடியோ … Read more

உடல் பருமனை குறைக்க விழிப்புணர்வு பிரச்சாரம்: நடிகர் மாதவன் உள்ளிட்ட 10 பேருக்கு பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: உடல் பருமனை குறைப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கினார். இதுதொடர்பாக நடிகர்கள் மாதவன், மோகன் லால், காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா உள்ளிட்ட 10 பேருக்கு அவர் சவால் விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் 119-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் வானொலியில் ஒலிபரப்பானது. அப்போது உடல் பருமன் பிரச்சினை குறித்து பிரதமர் மோடி விரிவாக பேசினார். “எட்டு பேரில் ஒருவர் உடல் பருமன் … Read more

இடதுசாரி கொள்கையை நிராகரித்துவிட்டனர்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கருத்து

பெர்லின்: ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தலில் வலதுசாரி கூட்டணி வெற்றி பெற்றதை வரவேற்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இடதுசாரி கொள்கையை மக்கள் நிராகரித்துவிட்டனர் என தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் கடந்த 23-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அங்கு மொத்தம் 630 இடங்கள் உள்ளன. இதில் கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் ஆப் ஜெர்மனி (சிடியு) மற்றும் கிறிஸ்டியன் சோசியல் யூனியன் இன் பவாரியா (சிஎஸ்யு) கட்சிகள் அடங்கிய வலதுசாரி கூட்டணி 208 அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இக்கூட்டணியைச் சேர்ந்தவரும் … Read more

சோலாப்பூரில் கர்நாடக அரசுப் பேருந்தை சிவசேனா தொண்டர்கள் மறித்ததால் பரபரப்பு

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் நகரில் உள்ள சாத் சாலையில் இலகல் மற்றும் சோலாப்பூர் நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் வடமேற்கு கர்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான பேருந்தை (KA 29 F 1350) சிவசேனா (உத்தவ் தாக்கரே) பிரிவைச் சேர்ந்த 15 முதல் 20 பேர் கொண்ட கும்பல் இன்று வழிமறித்தனர். அவர்கள் டிரைவரை பேருந்திலிருந்து வெளியே இழுத்து, அவரது முகத்தில் காவி சாயம் பூசி, “ஜெய் மகாராஷ்டிரா” போன்ற கோஷங்களை எழுப்பினர். அவர்கள் பேருந்தில் “ஜெய் … Read more

காஞ்சி சங்கர மடத்துக்கு வர உ.பி. முதல்வருக்கு அழைப்பு: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தகவல்

திருச்சி: கும்பமேளாவை சிறப்பாக நடத்திய உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மரியாதை செய்யும் விதமாக காஞ்சி சங்கர மடத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று முன்தினம் தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர். அங்கு புனித நீராடிய பின்னர் … Read more

நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் 12 பேர் டெல்லி வந்தனர்

புதுடெல்லி: அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய பிற நாட்டு மக்களை அமெரிக்க அரசு வெளியேற்றி வருகிறது. அமெரிக்காவின் நாடு கடத்தும் நடவடிக்கைக்கு பனாமா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகள் ஒத்துழைப்பு அளித்து வரும் வேளையில் சுமார் 50 இந்தியர்கள் அண்மையில் பனாமாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இவர்களில் 12 இந்தியர்கள் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இஸ்தான்புல் வழியாக நேற்று முன்தினம் டெல்லி வந்து சேர்ந்தனர். இதற்குமுன் 3 குழுவினரும் … Read more

சிவனும் சக்தியும் சேர்ந்தால் மாஸ் : இந்தியா-இங்கிலாந்து வர்த்தக பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியதை அடுத்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சு

“சிவன் மற்றும் சக்தியின் புனிதமான சங்கமமான, நாளை மறுநாள் மகாசிவராத்திரியைக் கொண்டாடுவதற்கு சற்று முன்பு, இன்று (இந்தியா மற்றும் இங்கிலாந்து) இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த விவாதங்களை மீண்டும் தொடங்குவது மிகவும் நல்ல விஷயம்” என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். இந்தியா-இங்கிலாந்து இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ளதால் இரு நாடுகளுக்கும் “வெற்றி” என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் … Read more

உலகத்துலேயே 50 வாட்ச் தான்.. வைரலாகும் ஹர்திக் பாண்டியாவின் ரூ.7 கோடி Richard Mille RM 27-02 வாட்ச்

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்தது. 242 ரன்கள் இலக்குடன் சேசிங் செய்ய களம் இறங்கிய இந்திய அணியில், விராட் கோலி சதமடித்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். ஹர்திக் பாண்டியா Virat Kohli : `Return Of … Read more