திருத்தணி ரயில் நிலைய பெயர் பலகையின் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் 22 பேர் கைது

திருத்தணி: திருத்தணி ரயில் நிலைய பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை கருப்பு பெயிண்டால் அழித்த திமுகவினர் 22 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக திமுக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் கிரண் தலைமையில், 20-க்கும் மேற்பட்டோர் இன்று மதியம் திருத்தணி ரயில் நிலையத்தில் திரண்டு, மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசுக்கு எதிராக … Read more

நாடு முழுவதும் 11 கோடி விவசாயிகளுக்கு 19-வது தவணையாக ரூ.2 ஆயிரம்: பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்

நாடு முழுவதும் 11 கோடி விவசாயிகளுக்கு 19-வது தவணையாக ரூ.2 ஆயிரம் உதவித் தொகையை பிரதமர் மோடி இன்று விடுவிக்க உள்ளார். பிரதமரின் கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். விவசாயிகளின் பயிர் செலவுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள சுமார் 11 கோடி சிறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. 4 … Read more

Dhanush 55: `முதல் சந்திப்பு; 2 கதைகள்; உண்மை சம்பவம்' – ராஜ்குமார் பெரியசாமி சொன்ன அப்டேட்

சென்னையில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு, ‘மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கருத்தரங்கு’ என்ற ஒரு கருத்தரங்கை நடத்தியது. திரைப்பிரபலங்கள் பலரும் இந்த கூட்டமைப்பில் கலந்துக் கொண்டு பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். அந்த வரிசையில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனுஷின் 55-வது திரைப்படம் குறித்தான சில தகவல்களையும் பகிர்ந்திருக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு `அமரன்’ திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் ராஜ்குமார் … Read more

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர் ஜெயலலிதா: பிரதமர் மோடி

புதுடெல்லி, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், மக்கள் என பலரும் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமது வாழ்க்கையை … Read more

விராட் கோலி 'கிங்' என்று அழைக்கத் தகுதியானவர் – பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்

துபாய், 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை … Read more

1,600 அரசு ஊழியர்கள் பணிநீக்கம் – டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த மாதம் பதவியேற்ற டிரம்ப், பல்வேறு முக்கிய திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். அதில், முக்கியத்துவம் வாய்ந்தது அரசுத் துறைகளில் பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கை ஆகும். ஏற்கெனவே லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு 8 மாத ஊதியத்துடன் கட்டாய ராஜினாமா செய்துகொள்ள டிரம்ப் நிர்வாகம் வாய்ப்பு அளித்திருந்தது. கடந்த மாதம் வெளியிட்டிருந்த உத்தரவில், பிப்ரவரி 6-ம் தேதிக்குள் பணியில் இருந்து ராஜினாமா செய்துகொண்டால் 8 மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அமெரிக்காவின் சர்வதேச … Read more

சென்னை: வசதி வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாகக் கூறி ரூ.18 லட்சம் மோசடி; போலி ரசீது கொடுத்தவர் கைது

சென்னை அடுத்த மேற்கு தாம்பரம், பூர்ணதிலகம் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம் (39). இவர் கனடாவில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் சேலையூரில் குடியிருந்தபோது சுரேஷ், அவரின் மனைவி ஆர்த்தி ஆகியோர் அறிமுகமாகியிருக்கிறார்கள். அப்போது சுரேஷின் குடும்பத்தினர் தங்களுக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளைத் தெரியும் என கூறியிருக்கிறார். இந்தச் சூழலில் திருமங்கலத்தில் உள்ள வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்க முடிவு செய்திருக்கிறார் சுந்தரம். இந்தத் தகவலை சுரேஷிடம் சுந்தரம் கூறியதும் உங்களுக்கு சலுகை விலையில் தமிழ்நாடு வீட்டு வசதி … Read more

100 நாள் வேலைத் திட்டத்தில் ரூ.3,300 கோடியை விடுவிக்க அமைச்சர் ஐ.பெரியசாமி வலியுறுத்தல்

திண்டுக்கல்: “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ரூ.3,300 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்” என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஒரு கோடியே 9 லட்சம் தனிநபர்களுக்கு வேலை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் 20 கோடி மனித சக்தி நாட்கள் வேலை வழங்க மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட நிலையில் இதுவரை 28.45 … Read more

விண்வெளியில் சதம் அடித்து இந்தியா சாதனை: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

விண்வெளியில் பாரதம் 100-வது சதம் அடித்திருக்கிறது. சந்திரயான், மங்கள்யான், ஆதித்யா எல்-1 என பல்வேறு வரலாற்று சாதனைகளை இஸ்ரோ படைத்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மனதின் குரலின் 119-வது நிகழ்ச்சி வானொலியில் நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கிரிக்கெட்டில் சதம் அடிக்கும்போது ஏற்படும் அளவற்ற மகிழ்ச்சியை நாம் அறிவோம். அதைவிட பெருமகிழ்ச்சியாக கடந்த மாதம் இஸ்ரோவின் 100-வது ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக சீறிப் பாய்ந்தது. இதன்மூலம் விண்வெளியில் பாரதம் சதம் … Read more

Prabhu Deva Concert: 'நிகழ்ச்சிக்கு வர சொன்னாருன்னு வந்தேன், ஆனா…' – பிரபு தேவா குறித்து வடிவேலு

நடிகரும், நடனக் கலைஞருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் நேற்று முன்தினம்( பிப்ரவரி 22) பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று வைப் செய்திருக்கிறார்கள். ஆட்டம், பாட்டம், கரகோஷத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியை ஏராளமான ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்திருகின்றனர். ‘ஊர்வசி ஊர்வசி’ பாடலுடன் பிரபுதேவா அரங்கம் அதிர நடன நிகழ்ச்சியை தொடங்கி வைத்திருக்கிறார். பிரபு தேவாவின் மகன், சாண்டி மாஸ்டர், நடிகர்கள் பரத், சாந்தனு, நாகேந்திர பிரசாத், நடிகைகள் லட்சுமி ராய், ரித்திகா சிங், … Read more