ரோகித்தை கேப்டன் பதவில் இருந்து தூக்க திட்டமா.. பிசிசிஐ-யின் முடிவு என்ன?

சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வியை தழுவியது. இதையடுத்து இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனை தேர்வு செய்வது குறித்து தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் பிசிசிஐ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. 

இருப்பினும் ரோகித் சர்மா கேப்டன்சியில் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, ஒருநாள் உலக கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை, தற்போது சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி வரை முன்னேறி இருக்கிறது. இப்படி ஐசிசி நடத்தும் அனைத்து விதமான தொடர்களிலும் இந்திய அணியை இறுதி போட்டி வரை அழைத்து வந்துள்ளார். ஒருவேளை சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் வென்றால், இதில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. 

அடுத்த மாதம் 30ஆம் தேதியுடன் ரோகித் சர்மாவுக்கு 38 வயது ஆகிவிடும். எனவே சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு அவர் ஓய்வு பெற வாய்ப்புள்ளது. ஒருவேளை அவர் ஓய்வு அறிவித்தால் அதன் பின் பிசிசிஐ அடுத்த கேப்டன் குறித்த முடிவை எடுக்கும். 

மேலும் படிங்க: நியூஸிலாந்து அணியில் முக்கிய வீரர் காயம்! பைனலில் விளையாடுவது சந்தேகம்!

அதேசமயம் ரோகித் சர்மா சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக தொடர விரும்பினால், அப்போது இது குறித்து பிசிசி, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என கூறப்படுகிறது. 

ரோகித் சர்மாவை தாண்டி அடுத்த கேப்டனை நோக்கி பிசிசிஐ நகர வாய்ப்புள்ளது. ஏன்னென்றால், 2027ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை போட்டி நடைபெற இருக்கிறத். அதற்கு சரியான இந்திய கேப்டனை தயார் செய்ய வேண்டும். தற்போது துணை கேப்டனாக இருக்கும் சுப்மன் கில் அல்லது கே.எல்.ராகுல் போன்றவர்களை அடுத்த கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளது. அவர்களை நியமித்து தயார் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் பிசிசிஐ இருக்கும் என கூறப்படுகிறது.  

மேலும் படிங்க: IND vs NZ Final: ஹர்திக் பாண்டியா வெளியே.. அவருக்கு பதில் யார்? இந்தியாவின் பிளேயிங் XI என்ன?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.