வரும் மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் 2025 தொடர் தொடங்க உள்ளது. பொதுவாக ஐபிஎல் என்றாலே ரசிகர்களிடையே கொண்டாட்டம் தொடங்கிவிடும். ஐபிஎல்லின் முக்கிய அணியான சிஎஸ்கே கடந்த தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. அதேபோல் மற்றொரு முக்கிய அணியான மும்பை இந்தியன்ஸ் அணியும் கடந்த நான்கு சீசன்களாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது.
இதன் காரணமாக இந்த இரு அணிகளும் இந்த சீசனில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கடந்த டிசம்பரில் ஐபிஎல்லின் மெகா ஏலம் நடைபெற்ற நிலையில், சில முக்கிய வீரர்கள் வேறு அணிக்கு சென்றனர். இது கூடுதல் சுவாரஸ்யத்தை தரும் என்பதில் ஐயம் இல்லை.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடர் தொடங்குவதற்கு முன்பே மிகப்பெரிய பின்னடைவு எற்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஹர்திக் பாண்டியா ஸ்லோ ஓவர்ரேட் மூலம் முதல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்ட காரணமாக சிஎஸ்கே அணிக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.
மேலும் படிங்க: IPL 2025: ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளின் பிளேயிங் XI என்ன?
இச்சூழலில் மும்பை அணியின் முக்கிய பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஏற்பட்டுள்ள காயம் இன்னும் குனமடையவில்லை. இதனால் அவர் தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி பயிற்சி செய்து வருகிறார். இதன் காரணமாக பும்ரா ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு வாரம் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும், அவர் ஏப்ரல் முதல் வாரத்திற்கு பின் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட முடியாமல் போனது. இந்த நிலையில், தற்போது ஐபிஎல் தொடரிலும் முதல் இரண்டு வாரத்திற்கு விளையாட முடியாது என்ற தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ நிர்வாகி ஒருவர், பும்ராவின் மருத்துவ அறிக்கைகள் நன்றாக உள்ளது. அவர் தற்போது பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தற்போது இருக்கும் நிலவரப்படி பும்ரா ஐபிஎல் தொடரில் ஏப்ரம் வாரத்திற்கு பிறகு தான் விளையாடுவார் என கூறியுள்ளார்.
மேலும் படிங்க: ind vs nz Final: பயிற்சியின் போது விராட் கோலிக்கு காயம்? இறுதி போட்டியில் விளையாடுவாரா?