துபாய்,
பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த 9-வது ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் லீக் மற்றும் அரையிறுதி சுற்றுகளின் முடிவில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.
இந்த போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய அணி வீரர் சுப்மன் கில் கூறியதாவது,
இறுதிப்போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பாரா என கேட்கிறீர்கள். ஆனால், இப்போது வரைக்கும் ட்ரெஸ்ஸிங் ரூமில் அதைப்பற்றி எதுவும் பேசப்படவில்லை. ரோகித்தும் இறுதிப்போட்டியை பற்றி மட்டும்தான் பேசிக்கொண்டிருக்கிறார். என தெரிவித்தார்.