Honeymoon: திருமணமான புதிதில் செல்லும் சுற்றுலாவை ஏன் 'தேன்நிலவு' என அழைக்கிறோம் தெரியுமா?

நவீன வாழ்க்கை முறையில் திருமணத்தில் அல்லது திருமணம் சார்ந்த விஷயங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் முதல் வெளி இடங்களுக்கு ஹனிமூன் செல்வது வரை திருமணம் சார்ந்த விஷயங்களில் இவையெல்லாம் இடம்பெற வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர்.

அதிலும் குறிப்பாக ஹனிமூன் செல்வது கட்டாயம் ஆகிவிட்டது. ஆனால் இந்த ஹனிமூன் என்ற வார்த்தை எங்கிருந்து எப்படி வந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? இது குறித்து இந்த பதிவில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

ஹனிமூன் என்ற சொல் ஹனி மற்றும் மூன் என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து வருகிறது. ஹனி என்ற சொல்லின் அர்த்தம் தேன் என்று தெரியும், தேனின் சுவையைப் போலவே புதுமண தம்பதிகளின் உறவில் இனிமை மற்றும் மகிழ்ச்சி பெருக வேண்டும் என்பதாம்.

வரலாற்று ரீதியாகத் தேன் என்பது காதல், செழிப்பு, கருவுறுதல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. எனவே திருமணத்தின் ஆரம்ப நாட்களுக்கு இந்த வார்த்தை பொருத்தமாக அமைகிறது.

ஐரோப்பாவில் புதுமண தம்பதிகளுக்குப் பெரும்பாலும் தேன் மற்றும் தண்ணீரிலிருந்து தயாரிக்கப்படும் பானத்தையே வழங்குவார்களாம். இதனாலும் தேனுடனான தொடர்பு மேலும் வலுவடைந்ததாகக் கூறப்படுகிறது.

மூன் (நிலா) என்ற வார்த்தை ஒரு மாத சந்திர சுழற்சியைக் குறிக்கிறதாம். இதனால்தான் ஹனிமூன் அந்த ஒரு மாதத்திற்குள் சென்று வருகின்றனர்.

தேனிலவு என்று சொல்லின் ஆரம்பக் கால தகவல்கள்

தேனிலவு என்ற சொல் காலப்போக்கில் பரிணமித்திருந்தாலும் இதற்கென வரலாற்றுப் பதிவுகள் உள்ளன.

வேர்ல்டுவைட் வேர்ட்ஸ் வலைத்தளத்தின் படி ஆங்கில இலக்கியத்தில் தேன்நிலவு என்ற வார்த்தையின் ஆரம்பக் கால பயன்பாடு 16ஆம் நூற்றாண்டில் ரிச்சர்ட் ஹுலோட் என்பவரால் பயன்படுத்தப்பட்டது.

பண்டைய பாபிலோனிய கலாச்சாரத்தில் மணமகளின் தந்தை திருமணத்திற்குப் பிறகு ஒரு மாதம் முழுவதும் சந்திர நாட்காட்டியைப் பின்பற்றி மணமகனுக்குத் தேன் சார்ந்த மதுபானத்தை வழங்குவார் என்று கூறப்படுகிறது.

இந்த காலம் ஆரம்பத்தில் ‘தேன்மாதம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பின்னர் அது ‘தேன் நிலவு’ என்ற வார்த்தையாக உருவாகியிருக்கிறது.

இன்று நாம் அறிந்தபடி, தேனிலவு பயணம் மேற்கொள்ளும் பாரம்பரியம் 19 ஆம் நூற்றாண்டிலேயே இருந்திருக்கிறது. இந்த சமயத்தில் பணக்கார ஐரோப்பிய ஜோடிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

உறவினர்களைப் பார்க்க அல்லது காதல் அனுபவங்களை அனுபவிக்க அழகிய இடங்களுக்குப் பயணம் செய்து இருக்கின்றனர். காலப்போக்கில், இந்தப் போக்கு உலகம் முழுவதும் பரவி, நவீன கால தேனிலவாகப் பரிணமித்தது, தம்பதிகள் தங்கள் ஓய்வுக்காகவும், பிணைப்புக்காகவும் மகிழ்ச்சியான இடங்களுக்குச் சென்று வருகின்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.