Champions Trophy Final: இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதி போட்டி நாளை (மார்ச் 09) துபாயில் நடைபெறுகிறது. இந்நிலையில், துபாய் மைதானத்தின் ஆடுகளம் எப்படி இருக்கும் என்பது குறித்து தற்போது கேள்விகள் எழும்பி இருக்கின்றன. பொதுவாக துபாய் ஆடுகளம் மிகவும் தோய்வாக இருப்பதால் பேட்டிங் கொஞ்சம் கடினமாக இருக்கிறது. இச்சூழலில் முன்னதாக நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா அரை இறுதி போட்டியில் ஆடுகள் ஓரளவுக்கு பேட்டிங்க்கு சாதகமாக இருந்தது.
இந்த நிலையில், இறுதி போட்டியில் ஆடுகளத்தை பொறுத்து இரு அணிகளுமே மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளதாக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், இறுதி போட்டியில் இரு அணிகளுமே தங்களது பிளேயிங் 11ல் மாற்றம் செய்தால் கூட நான் ஆச்சரியப்படப்போவதில்லை. ஏனென்றால் ஆடுகளம் எவ்வாறு இருக்கும் என்பதை பொறுத்துதான் அனைத்துமே தீர்மானிக்கப்படும்.
மேலும் படிங்க: இந்தியா – நியூசிலாந்து விளையாடப்போகும் பிட்ச் அதுதான்…. அப்போ வெற்றி கன்பார்ம்
அரைஇறுதியில் தயார் செய்யப்பட்ட துபாய் மைதானத்தின் ஆடுகளம் திருப்திகரமாக இருந்தது. இந்த தொடரிலேயே அதுதான் சிறந்த ஆடுகளம் என்று நான் கூறுவேன். தற்போது 5 நாட்கள் கிடைத்திருக்கிறது. இதனை பயன்படுத்தி மீண்டும் நல்ல ஒரு ஆடுகளத்தை அவர்களால் தயாரிக்க முடியும். மீண்டும் அரை இறுதி போன்ற ஆடுகளத்தை கொடுப்பார்களா அல்லது தோய்வான ஆடுகளத்தை கொடுப்பார்களா என்பதை பார்க்க வேண்டும். ஏனெனில் தேவையில்லாமல் அணியில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடாது.
கண்டிப்பாக இறுதி போட்டியில் ஒரு ஆல் ரவுண்டர்தான் ஆட்டநாயகன் விருதை பெறுவார் என நான் நினைக்கிறேன். அது அக்சர் பட்டேல், ஜடேஜா அல்லது நியூசிலாந்து வீரர் க்ளென் பிலிப்ஸாக கூட இருக்கலாம். க்ளென் பிலிப்ஸ் அபாரமான வீரராக இருக்கிறார். பேட்டிங், பீல்டிங் என பட்டையை கிளப்புகிறார். குறிப்பாக பேட்டிங்கில் குறைந்த பந்தில் 40, 50 ரன்களை குவிக்கிறார். பந்து வீச்சிலும் அசத்துகிறார். இறுதி போட்டியில் விராட் கோலி, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திர போன்ற வீரர்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.
இவர்களை முதல் 10 ரன்களுக்குள் ஆட்டமிழக்க செய்தால் தொந்தரவு இருக்காது. இல்லையென்றால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இந்தியாவை வீழ்த்தக்கூடிய ஒரு அணி இருக்கிறது என்றால் அது நியூசிலாந்து தான். இருப்பினும் இறுதி போட்டியில் இந்திய அணியே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.
மேலும் படிங்க: ரோகித்தை கேப்டன் பதவில் இருந்து தூக்க திட்டமா.. பிசிசிஐ-யின் முடிவு என்ன?