சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டி நாளை (மார்ச் 09) நடைபெறுகிறது. இந்தியா – நியூசிலாந்து மோதும் இப்போட்டி துபாயில் நடைபெறுகிறது. துபாய் மைதானத்தின் ஆடுகளம் தேய்மானம் அடைந்து ஸ்லோ பிட்சாக மாறும். எனவே பேட்ஸ்மேன்கள் ஆடுகளத்தில் சிறுதி நேரம் நின்று பொறுமையாக ரன்களை சேர்க்க வேண்டும். குறிப்பாக ஃபோர், சிக்சர்கள் என பவுண்டரிகள் அடிப்பதைவிட ஒன்று, இரண்டு, மூன்று என ஓடியே ரன்கள் சேர்க்க வேண்டும்.
இதன் காரணமாக இந்திய அணிக்கு விராட் கோலி ஒரு துருப்புச் சீட்டாக உள்ளார். பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான லீக் போட்டிகளில் அவர் அப்படியான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருந்தார். இத்தொடரில் அவர் ஒரு சதம், ஒரு அரைசதம் என மொத்தம் 217 ரன்கள் குவித்துள்ளார். எனவே இறுதி போட்டியிலும் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு கோப்பையை வென்று தருவார் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் உள்ளனர்.
மேலும் படிங்க: IPL 2025: ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளின் பிளேயிங் XI என்ன?
விராட் கோலிக்கு காயம்
இந்த நிலையில், இன்று நடைபெற்ற பேட்டிங் பயிற்சியின் போது அவருக்கு காயம் ஏற்ப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று பேட்டிங் பயிற்சியின் போது அவர் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டிருந்தார். அப்போது வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் வீசிய பந்து விராட் கோலியின் முழங்காலில் பட்டது. இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் உடனடியாக விராட் கோலி மருத்துவ உதவியை நாடி உள்ள நிலையில், அவருக்கு முதல் உதவி அளிக்கப்பட்டது.
இதையடுத்து தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் விராட் கோலியை பயிற்சியை நிறத்த சொல்லி இருக்கிறார். பின்னர் விராட் கோலி சிறிது நேரம் சக வீரர்களின் பயிற்சியை பார்த்துவிட்டு ஹோட்டலுக்கு திரும்பி உள்ளார். இந்த காயம் நாளை நடைபெறும் போட்டியில் கோலியை பங்கேற்க முடியாதபடி செய்துவிடக் கூடாது என ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.
மேலும் படிங்க: ind vs nz Final: இந்த அணிதான் கோப்பையை வெல்லும்.. அடித்து சொல்லும் ரவி சாஸ்திரி