18வது ஐபிஎல் சீசனின் 17வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. இந்த நிலையில், இப்போட்டியை நேரில் பார்க்க தோனியின் பெற்றோர் சென்னை சேப்பாக்கத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் இதுவரை தோனி விளையாடிய போட்டிகளை நேரில் பார்த்ததில்லை என கூறப்படுகிறது. முதல்முறையாக அவர்கள் சென்னை சேப்பாக்கத்திற்கு வந்துள்ளனர். இச்சூழலில் தோனி ஐபிஎல்லில் இருந்து ஓய்வை அறிவிக்க போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான எம். எஸ். தோனி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஓய்வை அறிவிக்காமல் தொடர்ந்து சென்னை அணியின் விளையாடி வருகிறார். இச்சூழலில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 9வது வரிசையில் பேட்டிங் செய்ய வந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. அப்போட்டியில் சென்னை அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
மேலும் படிங்க: பும்ரா இந்த ஆண்டு ஐபிஎல்லில் இல்லையா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!
இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் விவாதம் செய்தனர். தோனி அஷ்வினுக்கு முன்பாகவாது இறங்கி இருக்கலாம். அவர் ஏன் 9வது இடத்தில் இறங்கினார் என தங்களது கேள்விகளை எழுப்பி வந்தனர். இது தொடர்பாக சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கிடமும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், தோனியால் நீண்ட நேரம் களத்தில் நின்று பேட்டிங் செய்ய முடியாது. அவர் முன்பை போல் இல்லை. அவரது உடல் முன்பை போல் ஒத்துழைப்பு அளிப்பதில்லை. அவர் எந்த இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்கிறார் என கூறி இருந்தார்.
ஸ்டீபன் பிளமிங்கின் இந்த பதில் ரசிகர்களை அதிர்ப்தி அடைய செய்தது. அவர்கள் 2012 காலகட்டத்தில் நடந்த சம்பங்களை ஒப்பிட்டும் அப்போது உடற் தகுதி குறித்து தோனி பேசிய வீடியோ பகிர்ந்தும் தோனி ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது என கடுமையாக சாடி வந்தனர். இந்த நிலையில், டெல்லி அணிக்கு எதிரான இன்றைய போட்டி தோனி ஓய்வு பெறுவார் என கூறப்பட்டு வருகிறது. அதிலும், 2008 ஆம் ஆண்டு முதல் தோனி சென்னை அணிக்காக விளையாடி வரும் நிலையில், இன்று அவர்கள் மைதானத்திற்கு வந்துள்ளதால், தோனி ஓய்வு பெறுகிறாரோ என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி தோனி இந்த ஐபிஎல் போட்டி உடன் ஓய்வு பெற்றால் அவருக்கு மாற்று வீரராக 17 வயது ஆயுஷ் மாத்ரே என்ற மும்பை வீரரை சென்னை அணி தங்களுடன் வலைப்பயிற்சி செய்ய அழைப்பு விடுத்து இருந்தது. எனவே மாற்று வீரருக்கான தேவையும் இல்லாத போது 17 வயது வீரரை அழைக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போது தோனி ஓய்வு அறிவித்தால் ஆயுஷ் மாத்ரே அணியில் இணைய வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
மேலும் படிங்க: மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் சிக்கல்! சூர்யகுமார் யாதவ் கடும் அதிருப்தி