ஐபிஎல் தொடரின் 18வது லீக் ஆட்டம் இன்று (ஏப்ரல் 05) சண்டிகரின் முல்லன்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் களம் இறங்கினர். இந்த கூட்டணி நல்ல ரன்களை சேர்த்தது. நடப்பாண்டில் இதுவரை ரன்கள் சேர்க்காத ஜெய்ஸ்வால் இன்று ரன்களை குவித்தார். ஒருகட்டத்தில் சாம்சன் 38 ரன்கள் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து அரைசதம் விளாசிய 67 ரன்கள் எடுத்த ஜெய்ஸ்வாலும் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதையடுத்து ரியான் பராக் ரன்களை சேர்த்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. ரியான் பராக் 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக லோக்கி ஃபெர்குசன் 2 விக்கெட்களை எடுத்தார் .
மேலும் படிங்க: கடுமையாக சொதப்பிய சென்னை பேட்டர்கள்.. டெல்லி அணி அபார வெற்றி!
இதனைத் தொடர்ந்து 206 ரன்கள் என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது. அந்த் அணிக்கு சரியான தொடக்கம் கிடைக்கவில்லை. தொடக்க வீரர் ப்ரியான்ஸ் ஆர்யா எதிர்கொண்ட முதல் பந்திலேயே போல்ட் ஆகி வெளியேறினார். அவரை தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் 10, பிரப்சிம்ரன் சிங் 17, ஸ்டோனிஸ் 1 என அடுத்தடுத்து ஆட்டழந்து பஞ்சாப் அணி தடுமாறியது.
இதையடுத்து கைகோர்த்த மேக்ஸ்வெல் மற்றும் வதாரே கூட்டணி அந்த அணிக்கு ரன்களை சேர்க்க தொடங்கியது. இந்த கூட்டணி வெற்றிக்கு அழைத்து செல்லும் என்ற நம்பிக்கை வரும் தருணத்தில் மேக்ஸ்வெல் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் சென்ற உடனேயே அதிரடியாக விளையாடி வந்த வதாரேவும் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 62 ரன்கள் எடுத்திருந்தார்.
இறுதியில் பஞ்சாப் அணியால் 155 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ரன்கள் 50 வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி சார்பாக ஆர்ச்சர், தீக்சனா மற்றும் சந்தீப் சர்மா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இது பஞ்சாப் அணிக்கு முதல் தோல்வி ஆகும்.
மேலும் படிங்க: ஐபிஎல்லில் எம். எஸ். தோனியின் டாப் 5 இன்னிங்ஸ்!