எனக்கு பிடித்த கிரிக்கெட் பிளேயர்கள்… முதன்முறையாக பட்டியல் போட்ட எம்எஸ் தோனி..!

MS Dhoni Interview : இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான எம்எஸ் தோனி பேட்டி ஒன்றில் தனக்கு பிடித்த கிரிக்கெட் பிளேயர்கள் யார் என்பதை ஓபனாக பேசியுள்ளார். அந்த பேட்டியில் நீங்கள் விளையாடிய காலத்தில் எந்த இந்திய அணி உங்களுக்கு மிகவும் பிடித்த அணி? என கேட்க்கப்பட்டது. அதற்கு பதில் அளித்திருக்கும் எம்எஸ் தோனி, வீரேந்திர சேவாக், சச்சின், சவுரவ் கங்குலி, யுவ்ராஜ் சிங் ஆகியோர் இருந்த இந்திய அணியே எனக்கு மிகவும் பிடித்த அணியாக இருந்தது. அந்த அணியில் நான் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தன. ஒவ்வொரு விஷயங்களும் புதுமையாகவும், பெரிய அனுபவமாகவும் இருந்தது என தெரிவித்துள்ளார்.

தோனி பேசும்போது, ” எந்த அணி பிடித்தது என நீங்கள் கேட்டீர்கள் என்றால், நிச்சயமாக அது வீரூ பாய், சச்சின் பாய், சவுரவ் பாய் எல்லாம்  விளையாடிய அணி தான். எனக்கு வீரு பாய் ஓப்பனிங் மிகவும் பிடிக்கும், சச்சின் கிளாஸ், சவுரவ் கேப்டன்சி என எல்லாம் ரொம்ப பிடிக்கும். யுவ்ராஜ் சிக்சர் அடிப்பதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். அந்த அணியில் தான் நிறைய கற்றுக்கொண்டேன். மிகப்பெரிய அனுபவங்கள் எல்லாம் எனக்கு கிடைத்தது” என தெரிவித்துள்ளார். 

தோனியின் இந்த மனம் திறந்த பேட்டி இப்போது வைரலாகியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வரும் தோனி, எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறலாம் என்ற நிலையில் இருக்கிறார். இந்த அறிவிப்பு எந்த நொடியிலும் வெளியாகலாம் என்ற நிலையில், தன்னுடைய கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து பேட்டிகளில் வெளிப்படையாக பகிர்ந்து வருகிறார். அதில் தனக்கு பிடித்த இந்திய அணி பிளேயர்கள் குறித்தும் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்..

ஆனால், சேவாக் ரசிகர்கள் தோனியை விமர்சித்து வருகின்றனர். ஏனென்றால் இன்னும் சில காலம் இந்திய அணிக்கு விளையாட விரும்பிய சேவாக்கை வேண்டும் என்றே இந்திய அணியில் இருந்து நீக்கி கட்டாயம் ஓய்வு பெற வைத்துவிட்டு இப்போது வீரூ பாய் ஓப்பனிங் பிடிக்கும் என எப்படி தோனியால் கூற முடிகிறது என்றும் விமர்சித்து வருகின்றனர். அதேநேரத்தில் தோனி ஒரு கேப்டனாக சில கடினமான முடிவுகள் எடுக்க வேண்டியிருந்ததால் அப்படி நடந்து கொண்டிருக்கலாம். ஆனால், தோனி இந்திய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்பை இதுவரை எந்தவொரு இந்திய கேப்டனும் செய்யாத ஒன்று என தோனி ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கமெண்ட் அடித்து வருகின்றனர். 

நடப்பு ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வரும் தோனி பேட்டிங்கில் எதிர்பார்த்தளவுக்கு அதிரடியாக ஆடவில்லை. அதனால் அவர் ஓய்வு பெறுவதே சிறந்தது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். சிஎஸ்கே நிர்வாகமும் இது குறித்து இப்போது சிந்திக்க தொடங்கியிருக்கிறது. இந்த ஐபிஎல் தொடர் முடிவதற்குள் தோனி ஐபிஎல் போட்டியில் ஓய்வு பெறுவது குறித்த அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்புள்ளது என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.