நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 7 போட்டியில் வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வருகிறது. இதனால் வரும் போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கிறது.
அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் காயம் காரனமாக தொடரில் இருந்து விலகி உள்ளார். இதனால் தோனி அணியை வழிநடத்தி வருகிறார். அதேபோல் டெவால்ட் ப்ரூவிஸ் சென்னை அணிக்கு வருகை தந்துள்ளார். தொடக்க வீரர்களும் கடந்த போட்டியில் மற்றப்பட்டுள்ளனர். இப்படி சென்னை அணியில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு இனி அணியின் இடமில்லை என கூறப்பட்டு வருகிறது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. போட்டி முடிந்த உடன் பேசிய எம். எஸ். தோனி, சிஎஸ்கே அணியின் பந்து வீச்சு தற்போது சமநிலையில் இருப்பதாக கூறினார். மேலும், அஸ்வினுக்கு தாங்கள் அதிக அழுத்தத்தை கொடுத்துவிட்டதாகவும் அவரை பவர் பிளேவில் இரண்டு ஓவர்கள் பந்து வீசுவதையும் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் அவர் இனி அஸ்வினுக்கு இனி பிளேயிங் 11ல் இடம் இல்லை என்பதை சூசகமாக கூறுகிறார் என பலரும் மேற்கோள் காட்டி வந்தனர்.
இன்று (ஏப்ரல் 20) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை வான்கடேவில் வைத்து மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. வான்கடே மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட உள்ளது. எனவே அணியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமே இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி நூர் அகமது மற்றும் ரவீந்திர ஜடேஜா மட்டுமே அணியில் சுழற்பந்து வீச்சாலர்களாக இடம் பெற வாய்ப்பு உள்ளது. எனவே இந்த போட்டியிலும் அஸ்வினுக்கு அணியில் இடம் கொடுக்க வாய்ப்பில்லை. மேலும், இனி வரும் போட்டிகளிலும் அவருக்கு இடம் அளிக்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. இதனால், அஸ்வின் தனது கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடிவிட்டாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் படிங்க: கேகேஆர் பிளேயர் ரிங்கு சிங் நிச்சயதார்த்த தேதி…! சமாஜ்வாதி எம்பி-ஐ திருமணம் செய்கிறார்
மேலும் படிங்க: காலை முதல் இரவு வரை! பின்டஸ்காக விராட் கோலி செய்வது என்ன தெரியுமா?