ஐ.பி.எல்.: குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு

கொல்கத்தா,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகின்ற 39-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. மறுபுறம் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 ஆட்டங்களில் ஆடி 3-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டு புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி குஜராத் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரைன், அஜிங்க்யா ரகானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், மொயீன் அலி, ஆண்ட்ரே ரசல், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சகரவர்த்தி

குஜராத் டைட்டன்ஸ்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷெர்பேன் ரூதர்போர்ட், ராகுல் தெவட்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷாருக் கான், ரஷித் கான், சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.