விராட் கோலி விரும்பிக் கேட்கும் தமிழ் பாடல் என்ன தெரியுமா? கேட்டா ஷாக் ஆவீங்க!

IPL 2025 Virat Kohli: ஐபிஎல் தொடரின் 18வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரால் யார் அதிக சோகத்தில் இருக்கிறார்கள் என்று கேட்டால் நிச்சயம் அனைவரும் சிஎஸ்கேவையும், அதன் ரசிகர்களையும் கைகாட்டிவிடுவார்கள்.

Virat Kohli: உச்சக்கட்ட மகிழ்ச்சியில் விராட் கோலி

அதேபோல், நடப்பு ஐபிஎல் தொடரால் யார் அதிக மகிழ்ச்சியில் இருப்பார்கள் என்று கேட்டால் அது ஆர்சிபியும், அதன் ரசிகர்களும்தான் என்பதிலும் சந்தேகம் இருக்கப்போவதில்லை. ஆனால், அவர்கள் அனைவரையும் விட உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருப்பவர் யார் என்றால் அது விராட் கோலி தான்.

ஆர்சிபி விளையாடி 10 போட்டிகளில் 7இல் வெற்றி பெற்றுள்ளது, சின்னசாமியில் மட்டும் ஹாட்ரிக் தோல்வி. ஆனால் அந்த தோல்வி பாதைக்கும் முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. ஐபிஎல் வரலாற்றிலேயே அவே போட்டிகளில் தொடர்ச்சியாக 6 போட்டிகளை வெல்லும் முதல் அணி என்ற பெருமையை ஆர்சிபி பெற்றிருக்கிறது. இன்னும் அவே போட்டி ஒன்றே ஒன்றுதான் உள்ளது. சின்னசாமியில் 3 போட்டிகள் இருக்கினறன.

Virat Kohli: நம்பிக்கையுடன் இருக்கும் ஆர்சிபி

லக்னோவில் மட்டும் ஒரு அவே போட்டி இருக்கிறது. அடுத்து சின்னசாமியில் சிஎஸ்கே, ஹைதராபாத், கொல்கத்தா அணிகளுடன் விளையாட இருக்கிறது ஆர்சிபி. இதில் விராட் கோலி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 63.29 என்ற சராசரியில், 443 ரன்களை குவித்துள்ளார். அதில் 6 அரைசதங்கள் அடக்கம். மூன்று முறை நாட் அவுட்டாக இருந்துள்ளார். 

2016ஆம் ஆண்டு போல் இல்லாவிட்டாலும் ஓரளவு சிறப்பான சீசனாகவே ஆர்சிபிக்கு இந்த சீசன் அமைந்திருக்கிறது. கேப்டனாக ரஜத் பட்டிதர் நம்பிக்கையளிக்கிறார். பேட்டிங், வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு, பீல்டிங் என ஒட்டுமொத்தமாகவே ஆர்சிபி நம்பிக்கையளிக்கிறது. எனவே, 18வது சீசனில் ஜெர்ஸி நம்பர் 18க்கு (விராட் கோலிக்கு) கோப்பை உறுதிதான் என்று ரசிகர்கள் தற்போது குதூகலத்தில் குதிக்க தொடங்கிவிட்டனர்.

Virat Kohli: விராட் கோலி கேட்கும் தமிழ் பாடல்

இந்த சூழலில், ஆர்சிபி அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட் கோலி அளித்த பேட்டியின் ஒரு பகுதியை மட்டும் வீடியோவாக பதிவிட்டுள்ளனர். அதில் தற்போது நீங்கள் அதிகம் கேட்கும் பாடல் எது என்ற கேள்விக்கு விராட் கோலி பதிலளித்தார். அதில்,”தற்போது மிகவும் பிடித்த பாடல் என்றால்… இதை கேட்டால் நீங்கள் ஷாக் ஆயிருவிங்க…” என்று கூறிய விராட் கோலி ‘நீ சிங்கம் தான்’ பாடலை அவரது மொபைலில் ஒலிக்கச் செய்தார்.

Virat Kohli: தோனி என்ட்ரிக்கு பயன்படுத்தப்பட்ட பாடல்

2023ஆம் ஆண்டு ஜில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில், சிம்பு, கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான திரைப்படம், பத்து தல. இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். விராட் கோலி கூறிய நீ சிங்கம் தான் பாடல் இந்த திரைப்படத்தில் உள்ளதுதான். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சித் ஸ்ரீராம் பாடிய இப்பாடல் இணையத்தில் அதிகம் தோனிக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. சேப்பாக்கத்தில் தோனி என்ட்ரிக்கும் இந்த பாடல்தான் சில சமயங்களில் ஒலிபரப்பட்டுள்ளது.

Virat Kohli: சிம்பு பதிவு 

அப்படியிருக்க விராட் கோலி இந்த தமிழ் பாடலை கேட்பதாக கூறியிருப்பது பலருக்கும் வியப்பை தந்துள்ளது எனலாம். மேலும் நடிகர் சிம்புவும் அந்த வீடியோவை X தளத்தில் பகிர்ந்து “நீ சிங்கம் தான் விராட் கோலி” என பதிவிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.