IPL 2025 : டெல்லியின் கனவில் மண் அள்ளி போட்ட கேகேஆர் – அக்சர் படேல் புலம்பல்

IPL 2025 Playoff : ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டிவிட்டது. பிளே ஆப் வாய்ப்பை தக்க வைப்பது யார், ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் டாப் 2 இடத்தை பிடிக்கப்போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சிஎஸ்கே அணி முதல் அணியாக பிளேஆப் வாய்ப்பை இழந்துவிட்டது. சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு நூலிழை வாய்ப்பு மட்டுமே இருக்கின்றன. இனி வரும் ஒரு போட்டியில் கூட அந்த அணிகள் தோற்கவே கூடாது. அப்படி தோற்கும் அணி பிளே ஆப் வாய்ப்பில் இருந்து முற்றிலுமாக வெளியேறும்.

எஞ்சியிருக்கும் ஏழு அணிகளும் பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆனால், அடுத்த போட்டிகளில் வெற்றி பெறுவது மட்டுமில்லாமல் நல்ல ரன்ரேட்டிலும் அந்த வெற்றியை பெற்றாக வேண்டும். இப்போதைய சூழலில் ஆர்பிசி அணிக்கு மட்டும் பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகிவிட்டது. இன்னும் ஒரு போட்டியில் அந்த அணி பிளே ஆப்வாய்ப்பை உறுதி செய்விடும். இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் டாப் 2 இடத்துக்கான போட்டிக்கு சென்றுவிடும். மற்ற ஆறு அணிகளைப் பொறுத்தவரை டாப் 4 இடத்துக்குள் எப்படியாவது சென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கின்றன. 

அதனால், முன்னெப்போதும் இல்லாதளவுக்கு ஐபிஎல் சுவாரஸ்யமான கட்டத்தை நெருங்கியுள்ளது. ஒவ்வொரு போட்டியும் ஒரு அணியின் பிளே ஆப் வாய்ப்பு முடிவாகும். அந்தவகையில் ஆரம்பக்கட்டத்தில் சிறப்பாக விளையாடி புள்ளிப் பட்டியலில் டாப் 2 இடத்தில் இருந்த டெல்லி அணி இப்போது 5வது இடத்துக்கு சென்றுவிட்டது. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் அந்த அணி வெற்றி பெற்றிருந்தால் ஆர்சிபி அணியைப் போல் பிளே ஆப் வாய்ப்பை கிட்டதட்ட உறுதி செய்தியிருக்கும். ஆனால் கேகேஆர் அணி சிறப்பாக விளையாடி டெல்லி அணியின் கனவில் மண்ணை அள்ளி போட்டுள்ளது. 

இப்போது டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் கட்டாயம் எஞ்சியிருக்கும் நான்கு போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற வேண்டும். குறைந்தபட்சம் ஒன்றில் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க முடியும். அதுவும் ரன்ரேட் அடிப்படையில் மட்டுமே முடிவாகும். எப்படியும் கொல்கத்தாவை வீழ்த்திவிடலாம் என்ற மகிழ்ச்சியில் இருந்த டெல்லி கேப்டன் அக்சர் படேலுக்கு இந்த தோல்வி பெரிய வருத்ததை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்து வரும் போட்டிகளில் எப்படியாவது வெற்றி பெற்று பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்விடலாம் என்ற பேராசையில் இருக்கிறார். அவருடைய ஆசை நிறைவேறுமா?.

மேலும் படிங்க: சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டி.. பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸுக்கு வந்த சோதனை!

மேலும் படிங்க: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொத்து இனி இவர் தான் – எம் எஸ் தோனி ஓபன் ஸ்டேட்மென்ட்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.