Chennai Super Kings Playing XI: சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக ஐபிஎல் 2025 தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது. பிளே ஆப் செல்ல 4 இடங்களுக்கு தற்போது 9 அணிகள் ரேஸில் இருக்கின்றன. ஹைதராபாத், ராஜஸ்தானின் வாய்ப்புகள் நூலிழையில் தொங்கிக்கொண்டிருக்கின்றன.
IPL 2025: விறுவிறுப்பான பிளே ஆப் ரேஸ்
அந்த வகையில், ஆர்சிபி, பஞ்சாப், மும்பை, குஜராத், டெல்லி அணிகளுக்குள்ளும் போட்டிகள் அதிகமாகி உள்ளன. இதனால் அசால்ட்டாக இல்லாமல் முடிந்தளவு எதிர்வரும் போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய நிர்பந்தத்தில் ஒவ்வொரு அணிகளும் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, டெல்லி அணி அதன் கடைசி 5 போட்டிகளில் 3 தோல்விகளை சந்தித்துள்ளது.
அப்படியிருக்க, தற்போது பிளே ஆப் ரேஸில் இல்லாத சிஎஸ்கே இனி அச்சமின்றி, எவ்வித கவலையும் இன்றி ஒவ்வொரு போட்டியையும் எதிர்கொள்ளும். அடுத்து சேப்பாக்கத்தில் ராஜஸ்தான் உடன் மட்டும் ஒரு போட்டி இருக்கிறது. ஆர்சிபி, கேகேஆர், குஜராத் ஆகிய அணிகளுடன் அவே மைதானங்களில்தான் சிஎஸ்கே விளையாட இருக்கிறது.
CSK: 2 வீரர்களை நீக்க வேண்டும்
இந்த சீசனின் ஆரம்பக் கட்டத்தில் இருந்தது போல் இல்லாமல் சிஎஸ்கே தற்போது சிறப்பான முன்னேற்றத்தை கண்டிருக்கிறது எனலாம். பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிறு சிறு சிக்கல்கள் இருந்தாலும் ஒரு சமநிலையை பெற்றிருக்கிறது. அந்த வகையில், ஆரம்ப கட்ட பிளேயிங் லெவனில் இருந்து, காம்பினேஷனை சிக்கலாக்கிக் கொண்டிருந்த அஸ்வினை நீக்கியதை போல் இந்த 2 வீரர்களை நீக்கினால் நிச்சயம் பெரியளவில் கைக்கொடுக்கும் எனலாம்.
CSK: பதிரானாவுக்கு பதில் எல்லிஸ் ஏன்?
அதாவது மிடில் ஆர்டரில் ஹூடா இடத்தில் வன்ஷ் பேடி, பந்துவீச்சில் பதிரானாவுக்கு பதில் நாதன் எல்லிஸ். நீங்கள் அடுத்த ஆண்டிற்கான வீரர்களை செட் செய்ய நினைத்தால் இந்த மாற்றங்களை செய்தே ஆக வேண்டும். பதிரானாவை விட டெத் பந்துவீச்சில் நாதன் எல்லிஸிற்கு அனுபவம் ஜாஸ்தி. பதிரானா ஆக்சன் மாற்றத்தால் திணறி வருகிறார்.
CSK: வன்ஷ் பேடிக்கு வாய்ப்பு
வன்ஷ் பேடி டெல்லி பிரீமியர் லீக்கில் மிரட்டிய வீரர் ஆவார். இப்போது சாம் கரன் உங்களுக்கு இடது கை பேட்டராக டாப் ஆர்டரில் கைக்கொடுக்கும்போது, டிவால்ட் பிரேவிஸ் – தூபே ஆகியோருடன் பேடியும் இணைந்தால் மிடில் ஆர்டர் பிரச்னை தீர்ந்துவிடும். ஜடேஜாவை வேண்டுமென்றால் நம்பர் 4இல் நீடிக்க செய்யலாம் அல்லது நம்பர் 7 இறக்கலாம். இந்த மாற்றங்களை செய்தால் அடுத்து சின்னசாமியில் மட்டுமில்லை எல்லா மைதானங்களிலும் சிஎஸ்கேவால் அதிர்ச்சிகளை ஏற்படுத்த முடியும்.
CSK: சிஎஸ்கே பிளேயிங் லெவன் கணிப்பு
ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே, சாம் கரன், ரவீந்திர ஜடேஜா, டிவால்ட் பிரேவிஸ், ஷிவம் தூபே, வன்ஷ் பேடி, தோனி, அன்ஷூல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது. இம்பாக்ட் வீரர்: நாதன் எல்லிஸ்.