ஆதார் கார்டு ஆன்லைனில் பெறுவது எப்படி? பெயர் திருத்தம், புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட முழு விவரம்

Aadhaar card Full Guide : ஆதார் கார்டை UIDAI (Unique Identification Authority of India) வழங்குகிறது. இதை ஆன்லைனில் விண்ணப்பித்து புதிதாக பெறலாம் அல்லது ஏற்கனவே உள்ள ஆதாரை மாற்றம்/திருத்தம் செய்யலாம்.

1. புதிய ஆதார் கார்டுக்கு ஆன்லைன் விண்ணப்பிப்பது

தேவையான ஆவணங்கள்: பிறப்பு சான்றிதழ் / பள்ளி சான்றிதழ்
முகவரி சான்று (வோட்டர் ஐடி, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக்)
மொபைல் நம்பர் (UIDAI-ல் பதிவு செய்யப்பட்டது)

UIDAI அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும் – https://uidai.gov.in -“Get Aadhaar” – “Book an Appointment” ஆப்சன்களை தேர்வு செய்யவும்
முகவரியைத் தேர்ந்தெடுக்கவும்: உங்கள் அருகிலுள்ள ஆதார் என்ரோல்மென்ட் சென்டர் (Enrolment Centre) தேர்வு செய்யவும்.

ஆன்லைன் ஸ்லாட் புக்கிங்: தேதி & நேரத்தைத் தேர்ந்தெடுத்து ஆன்லைனில் அப்பாயின்மென்ட் எடுக்கவும். குறிப்பிட்ட நாளில் சென்று இ-சேவை சென்டரில் பயோமெட்ரிக் தரவை சமர்ப்பிக்கவும், உங்கள் கைரேகை, ஐரிஸ் ஸ்கேன் மற்றும் புகைப்படம் எடுக்கப்படும். ஆவணங்களை சரிபார்க்க கொடுக்கவும்.

ஆதார் எண் பெறுதல்: இந்த செயல்முறை முடிந்ததும், 28 இலக்க Enrollment ID கொண்ட ஆதார் விண்ணப்பத்துக்கான சான்று கொடுக்கப்படும். 90 நாட்களுக்குள் ஆதார் கார்டு உங்கள் முகவரிக்கு அஞ்சலில் வரும்.

2. ஏற்கனவே உள்ள ஆதாரை ஆன்லைனில் டவுன்லோட் செய்தல் (e-Aadhaar)

உங்கள் ஆதார் கார்டை இழந்துவிட்டால்/அச்சிட வேண்டுமென்றால், e-Aadhaar PDF ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம். UIDAI வலைத்தளத்தில் https://eaadhaar.uidai.gov.in லாகின் செய்யவும். ஆதார் எண் (Aadhaar Number), என்ரோல்மென்ட் ஐடி (Enrollment ID) ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து அந்த தகவலை உள்ளிட வேண்டும். இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை கொடுத்து OTPஐ பெறவும். அதனை உள்ளிட்ட பிறகு இ-ஆதார் காண்பிக்கப்படும். அந்த e-Aadhaar டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இ-ஆதாருக்கு பாஸ்வேர்ட், உங்கள் பெயரின் ஆங்கில எழுத்தின் முதல் 4 எழுத்துகள் (CAPS-ல்) + பிறந்த ஆண்டு (எ.கா: RAJA1990).

3. ஆதார் விவரங்களை ஆன்லைனில் மாற்றுதல் (Name, Address, Photo, etc.)

உங்கள் ஆதாரில் பெயர், முகவரி, புகைப்படம் போன்றவற்றை UIDAI வலைத்தளத்தில் திருத்தலாம். UIDAI-இன்  https://ssup.uidai.gov.in வலைதளத்தில் “Update Aadhaar” பக்கத்திற்குச் செல்லவும். “Update Demographics Data Online” தேர்வு செய்யவும். ஆதார் எண்ணை உள்ளிட்டு OTP பெறவும். திருத்த வேண்டிய தகவலைத் தேர்ந்தெடுத்து ஆவணங்களை அப்லோட் செய்யவும். UIDAI சரிபார்த்து, 15 நாட்களுக்குள் மாற்றம் செய்யப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.