CSK vs RCB IPL 2025: ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கிவிட்டாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இனி இழப்பதற்கு ஏதும் இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டது. தொடர் தோல்விகளால் ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்ட அந்த அணி, இனி மற்ற அணிகளின் பிளே ஆப் கனவில் விளையாடலாம். ஆம், இனி வரும் போட்டிகளில் சிஎஸ்கே எந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் எதிர்த்து விளையாடும் அணிகளின் பிளே ஆப் கனவை தகர்த்துவிடும். அந்தவகையில் நாளை பெங்களூருவில் நடக்கும் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் வெற்றி பெற்று டாப் 2 இடத்தை உறுதி செய்யலாம் என்ற கனவில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கனவுக்கு சிஸ்கே அணி தடை போட வாய்ப்பு இருக்கிறது.
10 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்றிருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி மேற்கொண்டு விளையாட இருக்கும் நான்கு போட்டியில் இரண்டு அல்லது மூன்று போட்டிகளை வெற்றி பெற்றால் டாப் 2 இடத்தை உறுதி செய்துவிடலாம் என இருக்கிறது. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை தொடர் தோல்வியில் இருப்பதால் இந்த சீசனை வெற்றிகரமாக முடிக்க வேண்டும், புள்ளிப் பட்டியலில் 10வது இடத்தில் இருக்கவே கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கிறது.
அதனால் எப்படியாவது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது. சிஎஸ்கே ரசிகர்களை பொறுத்தவரை குறைந்தபட்சம் இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும், குறிப்பாக ஆர்சிபி அணிக்கு எதிராக நாளை நடக்கும் போட்டியில் வெற்றியை சென்னை சூப்பர் கிங்ஸ் பெற வேண்டும் என விரும்புகின்றனர். அத்துடன் பிளே ஆப் டாப் 2 இடத்தை பிடிக்க நினைக்க திட்டமிட்டுள்ள ஆர்சிபி அணியின் கனவிலும் மண்ணை அள்ளிபோட வேண்டும் என்ற ஆதங்கத்துடன் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். இதற்காகவே சிஎஸ்கே வெற்றி பெற வேண்டும் என ஆர்சிபி ரசிகர்களுடன் மல்லுக் கட்டிக்கொண்டிருக்கின்றனர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள்.
இதனைக் கடந்து பார்க்கும்போது தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவாரா? என தெரியவில்லை. ஒருவேளை அவர் ஐபிஎல் தொடரில் ஓய்வை அறிவித்தால், அதற்கு முன்பு எம்எஸ் தோனி vs விராட் கோலி ஆடிய கடைசி போட்டியாக இது இருக்கும். எனவே, இரண்டு ஸ்டார் பிளேயர்கள் கடைசியாக எதிரெதிர் துருவங்களாக மோதும் போட்டியாகவும் இது அமைய வாய்ப்பு இருப்பதால் இதுவும் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க வைத்துள்ளது.
மேலும் படிங்க: மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வரலாறு படைத்த ரோகித், இதுவரை யாரும் செய்யாத சாதனை..!!
மேலும் படிங்க: காதலில் விழுந்த ஷிகர் தவான்.. யார் இந்த சோஃபி ஷைன்?