ஜெய்ப்பூர்,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றிரவு (வியாழக்கிழமை) 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் ரோகித் சர்மா, ரியான் ரிக்கல்டன் இருவரும் அதிரடியாக விளையாடினர். பந்துகளை, பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்டனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதமடித்து அசத்தினர். ரியான் ரிக்கல்டன் 61 ரன்களும், ரோகித் சர்மா 53 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் சூர்யகுமார் யாதவ் , ஹர்திக் பாண்டியா இருவ்ரும் அதிரடியாக விளையாடினர் .
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 217 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 218 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடுகிறது.