கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய அஷ்வின் மெகா ஏலத்திற்கு முன்பாக அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து ரவிச்சந்திரன் அஷ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மெகா ஏலத்தில் ரூ. 9.75 கோட்டிக்கு வாங்கியது. இதன் மூலம் மீண்டும் சென்னை அணிக்கு அஷ்வின் வந்ததால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.
ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அவரது செயல்பாடு இல்லை. இதுவரை அவர் 7 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில், 5 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தி உள்ளார். அவரது செயல்பாடு சென்னை அணிக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடிய 10 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை அந்த அணி முற்றிலுமாக இழந்துவிட்டது.
ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு கடைசியாக விளையாடிய பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், அவருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பேசி உள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நூர் அகமது, ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஒன்றாக இணைந்து பந்து வீசி இருந்தால், அந்த அணியை சென்னை அணி வீழ்த்தி இருக்கலாம். ஆனால் சென்னை அணி சூழ்நிலைக்கு ஏற்றவாறு அணியை தேர்வு செய்வதில்லை.
ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு ரூ. 9.75 கோடி கொடுத்திருப்பது அவரை வெளியில் அமர வைப்பதற்கு அல்ல. அவர் ஏன் விளையாடவில்லை என எனக்கு புரியவில்லை. அவர் யாரிடமாவது சண்டை போட்டு இருக்கலாம். சென்னை அணியில் அஷ்வின் மட்டுமே சரியாக விளையாடாத வீரர் அல்ல. மற்றவர்களும் சராசரியாகதான் விளையாடுகிறார்கள். ஆனால் அஷ்வின் மட்டுமே வெளியே உட்காரவைக்கப்பட்டுள்ளார். அவர் பஞ்சாப் அணிக்கு எதிராக கண்டிப்பாக விளையாடி இருந்திருக்க வேண்டும். அந்த போட்டியில் பந்து நன்றாக ஸ்பின் ஆனது என கூறினார்.
மேலும் படிங்க: மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வரலாறு படைத்த ரோகித், இதுவரை யாரும் செய்யாத சாதனை..!!
மேலும் படிங்க: காதலில் விழுந்த ஷிகர் தவான்.. யார் இந்த சோஃபி ஷைன்?