பஹல்காம் தீவிரவாத தாக்குதலில், பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பு குறித்து தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சரிடம், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கினார்.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. மேலும் ஐ.நா பொதுச் சபையில் 10 நாடுகள் 2 ஆண்டு காலத்துக்கு நிரந்தரமற்ற உறுப்பினர்களாக உள்ளன. 2025-26-ம் ஆண்டு காலத்தில் பாகிஸ்தானும் ஐ.நா உறுப்பினராக உள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல், எகிப்து, ஜோர்டான், இத்தாலி, ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், இலங்கை, ஆஸ்திரேலியா, நேபாளம் உட்பட பல நாட்டின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து, பிரதமர் மோடிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
இந்நிலையில் ஐ.நாவி.ல் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் போன் செய்து பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பு குறித்து விளக்கி வருகிறார். ஏற்கெனவே 8 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களிடம் பேசிவிட்டார். இந்நிலையில் தென் கொரி வெளியிறுவுத்துறை அமைச்சர் சோ டே-யுல்லுடன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று பேசினார். பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பு குறித்தும், தீவிரவாதத்தை இந்தியா பொறுத்துக்கொள்ளாது என்பதையும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் கொள்கையை ஐ.நா.வின் நிரந்தரமற்ற நாடுகளுக்கு தெரிவிப்பதன் மூலம் அந்நாட்டுக்கு பிற நாடுகள் எதிர்காலத்தில் ஆதரவு அளிப்பதை தடுக்க முடியும்.