கொல்கத்தா: மேற்கு வங்க முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மீது வழக்கு தொடர அமலாக்கத் துறைக்கு மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் அனுமதி வழங்கியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் கடந்த 2011 முதல் 2021 வரை கல்வி அமைச்சராக இருந்தவர் பார்த்தா சாட்டர்ஜி. இடைநிலைப் பள்ளி ஆட்சேர்க்கை முறைகேடு வழக்கில் சிறையில் உள்ளார். இவருக்கு ஜாமீன் வழங்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பரில் மறுத்துவிட்டது.
இந்நிலையில் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் மேற்கு வங்க தொடக்க கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவர் மாணிக் பட்டாச்சார்யா மீது வழக்கு தொடர அமலாக்கத் துறைக்கு ஆளுநர் ஆனந்த போஸ் அனுமதி வழங்கியுள்ளார். பார்த்தா சாட்டர்ஜி தற்போது பெஹலா பஸ்ஸிம் தொகுதி திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏவாக உள்ளார்.