மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வரலாறு படைத்த ரோகித், இதுவரை யாரும் செய்யாத சாதனை..!!

Rohit Sharma Record : ஐபிஎல் 2025 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, அந்த அணிக்காக இதுவரை யாரும் செய்யாத மாபெரும் சாதனையை செய்துள்ளார். வியாழக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அத்துடன் ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்து அசத்தியது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 36 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 147.22 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் எடுத்தார். இதில், 9 பவுண்டரிகளை அடித்தார். 

ரோஹித் சர்மா படைத்த வரலாறு

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் ரோகித் சர்மா புதிய வரலாறு படைத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் ஒரே அணிக்காக 6000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்த இரண்டாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா தற்போது பெற்றுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 231 போட்டிகளில் விளையாடி 6024 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா, விராட் கோலிக்குப் பிறகு டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக 6000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார், அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 277 போட்டிகளில் 8871 ரன்கள் எடுத்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக அதிக ரன்கள்

1. விராட் கோலி – 277 போட்டிகளில் 8871 ரன்கள்
2. ரோகித் சர்மா – 231 போட்டிகளில் 6024 ரன்கள்
3. சுரேஷ் ரெய்னா – 200 போட்டிகளில் 5529 ரன்கள்
4. மகேந்திர சிங் தோனி – 268 போட்டிகளில் 5269 ரன்கள்

ரோகித் கடைசி 5 இன்னிங்ஸ்கள்

2025 ஐபிஎல்-ல் மோசமான தொடக்கத்தை கொடுத்தார் ரோகித் சர்மா. முதல் ஐந்து போட்டிகளில் வெறும் 56 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் அவர். ஆனால் இப்போது பழைய பார்முக்கு திரும்பியுள்ளார் ரோகித். ரோஹித் சர்மா தனது கடைசி 5 இன்னிங்ஸ்களில் 234 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 2 முறை நாட்அவுட் பேட்ஸ்மேனாக அரைசதம் அடித்திருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக நேற்றைய போட்டியிலும் 53 ரன்கள் விளாசினார். மேலும் ரியான் ரிக்கெல்டனுடன் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் 116 ரன்கள் சேர்த்தார், 

மும்பை இந்தியன்ஸ் அணி முதலிடம்

இந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணி, ஐபிஎல் 2025 இல் தொடர்ச்சியாக ஆறாவது வெற்றியைப் பதிவு செய்தது. மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் (MI) அணி 217/2 என்ற மிகப்பெரிய ஸ்கோரைப் குவித்தது. பின்னர் மும்பை இந்தியன்ஸ் (MI) பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீச ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணி 16.1 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் பெரிய வெற்றியைப் பெற்ற மும்பை இந்தியன்ஸ் ஜெய்பூர் மைதானத்தில் 2012 -க்குப் பிறகு முதல் வெற்றியை பதிவு செய்தது.

மேலும் படிங்க: கிரிக்கெட்டில் இத்தனை வகையான டக்-அவுட்டா? முழு பட்டியல் இதோ!

மேலும் படிங்க: மும்பை ரசிகர்களுக்கு ஷாக்.. அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.