வரும் மே 6 ஆம் தேதி வெளியாக உள்ள ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டாரின் வின்ட்சர் இவி அடிப்படையிலான பெரிய 50.6kWh பேட்டரி கொண்ட வின்ட்சர் புரோ இவி காரில் பல்வேறு நவீன வசதிகளுடன் லெவல் 2 ADAS பாதுகாப்பு தொகுப்பினை பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
MG Windsor Pro EV ரேஞ்ச் என்ன ?
இந்தோனேசியா உட்பட சில நாடுகளில் கிடைக்கின்ற 50.6kWh பேட்டரி கொண்ட மாடலில் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 460 கிமீ (CLTC) வரை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக தற்பொழுது சந்தையில் உள்ள 38kWh பேட்டரி மாடல் முழுமையான சார்ஜில் 332km (ARAI) என சான்றிதழ் பெறப்பட்டு உண்மையான ரேஞ்ச் 270-280கிமீ கிடைக்கின்றது.
வரவுள்ள வின்ட்சர் புரோ மாடலின் பவர் மற்றும் டார்க் ஆனது தற்பொழுது உள்ள 38kwh வேரியண்டடை போலவே 136PS அல்லது 100KW பவர் வழங்கும் PMSM மோட்டார் ஆனது 200 Nm டார்க் வெளிப்படுத்தும்.
விற்பனையில் உள்ள மாடலை போலவே மிகவும் ஆடம்பரமான இருக்கைகள், பல்வேறு இணையம் சார்ந்த நவீன வசதிகள், லெவல் 2 ADAS பாதுகாப்பு வசதி ஆகியவற்றுடன் சிறிய அளவிலான டிசைன் மாற்றத்தை கொண்ட அலாய் வீல் பெற்றிருக்கலாம்.
புதிய வின்ட்சர் இவி புரோ ஆரம்ப விலை ரூ.20 லட்சத்துக்குள் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், ஏற்கனவே சந்தையில் உள்ள மாடல் ரூ.14 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை பேட்டரியுடன் கூடிய விலை அமைந்துள்ளது.
விற்பனைக்கு வந்த நாள் முதலே எம்ஜி வின்ட்சர் அமோகமான வரவேற்பினை பெற்று 20,000 கூடுதலான விநியோகத்தை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.