கேரன்ஸ் எம்பிவி காரிலிருந்து பிரீமியம் வசதிகளை கொண்ட கியா நிறுவனத்தின் புதிய கிளாவிஸ் எம்பிவி மே 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு அனேகமாக நடப்பு மே மாத இறுதியில் விலை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சமீபத்தில் கியா வெளியிட்டிருந்த சிரோஸ் எப்படி 4 மீட்டருக்கு குறைவான எஸ்யூவி சந்தையில் சொனெட்டை விட மாறுபட்டதாக அமைந்திருக்கின்றதை போலவே கிளாவிஸ் எம்பிவி சற்று மாறுபட்ட வசதிகளுடன் அனேகமாக ரூ.12 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கலாம்.
எஞ்சின் ஆப்ஷனில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல் தற்பொழுதுள்ள கேரன்ஸ் காரில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷன் கொண்டிருக்கலாம்.
வெளியிடபட்டுள்ள டீசர் மூலம், சமீபத்தில் வெளியிடப்பட்ட கியா கார்களில் இடம்பெற்றுள்ள புதிய அமைப்பிலான கிரில் உடன் எல்இடி விளக்குகளுடன் கூடிய ஹெட்லைட் அமைப்பு போன்றவை மேம்பட்டதாக அமைந்திருக்கலாம் என உறுதியாகியுள்ளது.
புதிய டூயல் டோன் அலாய் வீல் பல்வேறு மாறுபட்ட டிசைன் கொண்ட எல்இடி டெயில் லைட் உடன் லைட் பார் போன்றவை பெற்றிருக்கலாம்.
இன்டீரியர் இருக்கைகள் மேம்படுத்தப்பட்டு பின்புற இருக்கைகளுக்கும் வென்டிலேசன் வசதி ஆகியவற்றுடன் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் 6 ஏர்பேக்குகளுடன் லெவல் 2 ADAS பாதுகாப்பினை டாப் வேரியண்டில் பெறக்கூடும் என டீசர் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.