முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ள ஃபோக்ஸ்வாகன் கோல்ஃப் GTI காரில் அதிகபட்ச பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தும் 265hp மற்றும் 370Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பெற்றிருக்கும்.
VW Golf GTi சிறப்பம்சங்கள்.!
மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தும் இந்த காரின் விற்பனை எண்ணிக்கை இந்திய சந்தைக்கு மிக குறைவாகவே கிடைக்கும் என்பதனால் முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்க உள்ளது. மே 5 ஆம் தேதி முன்பதிவு துவங்கப்பட்டு டெலிவரி ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட உள்ளது.
மணிக்கு அதிகபட்ச வேகம் 250 கிமீ ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ள கோல்ஃப் GTI காரில் 265hp பவர் மற்றும் 370Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் TSI பெட்ரோல் பொருத்தப்பட்டு 7 வேக டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
இந்திய சந்தையில் வரவுள்ள மாடல் சர்வதேச மாடலுக்கு இணையாகவே பல்வேறு வசதிகளை பெற்று இன்டீரியரில் 15-இன்ச் சென்ட்ரல் டச்ஸ்கிரீன் மற்றும் 10.3-இன்ச் ஆல்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை பெற்று GTi ஸ்டீயரிங் வீல் மற்றும் GTi பிராண்டிங் கொண்ட ஸ்போர்ட்ஸ் இருக்கைகளை கொண்டிருக்கும்.
இரட்டை புகைப்போக்கி, 18 அங்குல அலாய் வீல் பெற்று கிரெனடில்லா பிளாக் மெட்டாலிக், ஓரிக்ஸ் ஒயிட் பிரீமியம், மூன்ஸ்டோன் கிரே பிளாக் மற்றும் கிங்ஸ் ரெட் பிரீமியம் என நான்கு நிறங்களுடன் விலை ரூ.46 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.