டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் எக்ஸ்குளூசிவ் எடிசன் சிறப்புகள் | Automobile Tamilan

விற்பனையில் உள்ள ZX(O) வேரியண்ட்டை விட ரூ.1.24 லட்சம் விலை அதிகரிக்கப்பட்டு ரூ.32.58 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இன்னோவா ஹைகிராஸ் எக்ஸ்குளூசிவ் எடிசனை டூயல் டோன் கொண்டதாக டொயோட்டா வெளியிட்டுள்ளது.


வெளியிடப்பட்டுள்ள புதிய எக்ஸ்குளூசிவ் எடிசன் சிறப்புகள்..!

  • மே முதல் ஜூலை 2025 வரை மட்டும் கிடைக்க உள்ளது.
  • வெள்ளை நிறத்தில் சூப்பர் வெள்ளை, பேரல் வெள்ளை இரு நிறங்களுடன் மேற்கூறை கருப்பு நிறத்தை பெற்றதாக அமைந்துள்ளது.
  • கிரில், கார்னிஷ், வீல் ஆர்ச் உட்பட ஒரு சில இடங்களில் பளபளப்பான கருப்பு நிறம் உள்ளது.
  • பானெட்டில்  ‘Innova’ பேட்ஜ் மற்றும் எக்ஸ்குளூசிவ் எடிசன் பேட்ஜ் உள்ளது.
  • இன்டீரியரில் டூயல் டோன் நிறங்களுடன், வயர்லெஸ் சார்ஜர், காற்று சுத்திகரிப்பான் போன்றவை உள்ளது.

இன்னோவா ஹைகிராஸ் காரில் தொடர்ந்து 2.0-லிட்டர், நான்கு-சிலிண்டர் ஹைப்ரிட் எஞ்சின் 184hp பவரை வெளிப்படுத்துகின்றது. ஹைபிரிட் மாடலில் 60% நேரத்தை மின்சார (EV) பயன்முறையில் இயக்க உதவுகிறது. இந்த ஹைப்ரிட் காரின் மைலேஜ் லிட்டருக்கு 23.24 கிமீ என டொயோட்டா சான்றிதழ் பெற்றுள்ளது.

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.