டாடா மோட்டார்சின் பிரசத்தி பெற்ற பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலாக விளங்குகின்ற அல்ட்ரோஸ் காரின் அறிமுகம் மே 9, 2025 அன்று மேற்கொள்ளப்பட்டு விலை மே 22 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் டீசர் மூலமாக டிசைன் மற்றும் புதிய வசதிகள் விபரம் வெளியாகியுள்ளது.
2025 டாடா Altroz மாற்றங்கள் என்ன?
முன்புற தோற்ற அமைப்பில் புதுப்பிக்கப்பட்ட பம்பருடன் மிக நேர்த்தியான புதிய எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய எல்இடி ஹெட்லைட் பெற்றதாகவும், பனி விளக்கு அறை என பல்வற்றில் மாற்றத்தை கண்டதாக அல்ட்ரோஸ் அமைந்துள்ளது.
பின்புறத்தில் புதுப்பிக்கப்பட்ட எல்இடி விளக்குடன் கூடுதலாக சிறிய அளவிலான பம்பர் டிசைன் மாற்றங்களுடன், பக்கவாட்டில் பிளெஷ் கைப்பிடிகளை பெற்ற கதவுகள், புதிய டிசைனை கொண்ட அலாய் வீல் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
காரின் இன்டீரியர் தொடர்பாக தற்பொழுது டீசர் வெளியாகவில்லை என்றாலும், கேபின் நிறங்கள் மாறுபட்டதாகவும் சில வசதிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மற்றபடி, அல்ட்ரோஸ் எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 1.2-லிட்டர், மூன்று சிலிண்டர் என்ஜின் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 86hp மற்றும் 113Nm டார்க் வெளியிடுகிறது. அதுவே CNG எரிபொருள் பெற்ற மாடல் 77hp மற்றும் 97Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும்.
1.5 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 4000rpm-ல் 89PS பவர் மற்றும் 1250-3000rpm-ல் 200Nm வெளிப்படுத்தும். இதில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த மாடலுக்கு போட்டியாக, மாருதி பலேனோ, டொயோட்டா கிளான்ஸா, ஹூண்டாய் ஐ20 போன்றவை உள்ளன.