டிவிஎஸ் மோட்டாரின் புதிய ஸ்போர்ட் 110cc பைக்கில் கூடுதலாக செல்ஃப் ஸ்டார்ட் ES+ என்ற வேரியண்டில் ஸ்டைலிஷான பாடி கிராபிக்ஸ் உட்பட யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட அம்சங்களுடன் அலாய் வீல் பெற்று ரூ.67,322 முதல் ரூ.72,365 (எக்ஸ்-ஷோரூம்) வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்நது அதிக மைலேஜ் தருகின்ற பைக் மாடல்களில் ஒன்றாக விளங்குகின்ற ஸ்போர்ட் 110 பைக்கில் 09.7 சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் ஸ்போர்ட்டின் பவர் அதிகபட்சமாக 7,350rpm- 8.17bhp மற்றும் 4,500rpm-ல் 8.7Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிமீ எட்டு்ம் பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் 5 ஸ்டெப் அட்ஜெஸ்டெட் ஸ்பிரிங் ஷாக் அப்சார்பருடன் இரு பக்க டயர்களிலும் டிரம் பிரேக்குடன் முன்புறத்தில் 130 மிமீ மற்றும் பின்புறத்தில் 110மிமீ வழங்கப்பட்டு சிபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.
கிரே ரெட், பிளாக் நியான் என இரு நிறங்களை ES+ வேரியண்ட் பெற்றுள்ள நிலையில், கூடுதலாக செல்ஃப் ஸ்டார்ட் ES வேரியண்டில் எந்த பாடி கிராபிக்ஸ் அல்லாத மாடலில் நீலம், கருப்பு, கிரே, சிவப்பு என நான்கு நிறங்களும், டாப் செல்ஃப் ஸ்டார்ட் ELS வேரியண்டில் மாறுபட்ட பாடி கிராபிக்ஸ் பெற்று பிளாக் நீலம், பர்பிள், மெட்டாலிக் ப்ளூ, ரெட் என நான்கு நிறங்கள் உள்ளன.
- Self Start (ES) – Alloy Wheels ₹ 67322
- Self Start ES+ ₹ 68322
- Self Start (ELS) – Alloy Wheels ₹ 72,365
(ex-showroom)