சென்னை: சென்னை கடற்கரை உள்பட பல பகுதிகளில் வாகன நிறுத்த கட்டணம் வசூலில் முறைகேடுகள் நடைபெற்று வரும் நிலையில், அதை தடுக்க, இனி டிஜிட்டல் முறையில் மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. வாகன நிறுத்தம் தொடர்பாக சென்னையில் அவ்வப்போது வாகன உரிமையாளர்களுக்கும், கட்டணம் வசூலிப்போருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. மேலும் பல பகுதிகளில் வாகன கட்டணங்களுக்கு முறையான கட்டணச் சீட்டும் வழங்கப்படுவது இல்லை. இதுதொடர்பாக பொதுமக்கள் ஏராளமான புகார்களை மாநகராட்சிக்கும், […]
