உ.பி.யின் மதுராவில் 8 உறுப்பினர்கள் கொண்ட முஸ்லிம் குடும்பம் இந்து மதத்துக்கு மாற்றம்

மதுரா: உத்தர பிரதேச மாநிலம் மது​ரா​வின் ஷெர்​கர் பகு​தியை சேர்ந்​தவர் ஜாகிர் (50). இவர் மது​ரா​வில் உள்ள ஜமு​னாபர் பகு​தி​யில் தனது மாமி​யார் குடும்​பத்​துடன் வசிக்​கிறார்.

இவரது குடும்​பத்​தில் மொத்​தம் 8 பேர் உள்​ளனர். இவர்​கள் அனை​வரும் நேற்று முஸ்​லிம் மதத்​தில் இருந்து இந்து மதத்​துக்கு மாறினர். அவர்​களு​டைய பெயர்​களை​யும் மாற்​றிக் கொண்​டனர். ஜாகிர் மற்​றும் அவரது குடும்​பத்​தினர் இந்து மதத்​துக்கு மாறும் வேத சடங்​கு​கள் விருந்​தாவனில் நேற்​று​ முன்​தினம் நடந்​தன.

ஜாகிர் தனது பெயரை ஜகதீஷ் என்று மாற்​றிக் கொண்​டுள்​ளார். அதே​போல் அவரது குடும்​பத்​தினர் இந்​துக்​களின் பெயர்​களை வைத்​துக் கொண்​டனர். இதுகுறித்து ஜகதீஷ் கூறிய​தாவது: இந்​தி​யா​வில் முகலாயர்​கள் படையெடுப்​புக்கு முன்​னர் எங்​களு​டைய மூதாதையர்​கள் எல்​லாம் இந்​துக்​களாக இருந்​தவர்​கள்​தான். அவர்​களை கட்​டாய மதமாற்​றம் செய்​துள்​ளனர். எனினும், என்​னுடைய மனம், சொல், செயல் அனைத்​தும் காளியை வணங்​கு​வ​தாக இருக்​கிறது. என் கிராம மக்​கள் கூட என்னை பகத் ஜி என்​று​தான் அழைப்​பார்​கள். முஸ்​லிம் மதத்​தில் இருந்து இந்து மதத்​துக்கு திரும்​பியது மீண்​டும் எங்​கள் வீட்​டுக்கு திரும்​பும் செய​லாகும். எங்​கள் மூதாதையர்​களின் நம்​பிக்​கையை தொடர இவ்​வாறு இந்​துக்​களாக மாறினோம். நாங்​கள் மதம் மாற யாருடைய துாண்​டு​தலும் இல்​லை. நாங்​களாக விருப்​பப்​பட்​டு​தான் மாறினோம். எங்​கள் குடும்​பம் குஜ்ஜார் இனத்தை சேர்ந்​தது. இந்து மதத்​தின் மீது முழு நம்​பிக்கை வைத்து நாங்​கள் வீடு திரும்​பி​யுள்​ளோம். இவ்​வாறு ஜகதீஷ் கூறி​னார்.

விருந்​தாவனில் உள்ள பகவத் தாம் ஆசிரமத்​தில் இந்து மதத்​துக்கு மாறும் வேத சடங்​கள் நடை​பெற்​றன. யாகங்​கள் நடத்​தப்​பட்​டன. ஜகதீஷ் மனை​வி, மகன்​கள், மரு​மகள், பேரக் குழந்​தைகள் என 8 பேர் முஸ்​லிம் மதத்​தில் இருந்து இந்து மதத்​துக்கு மாறினர். இதுகுறித்து இந்து யுவ வாகினி ஆர்​வலர் சரத் சைனி கூறும்​போது, ‘‘ஜாகிர் மற்​றும் அவரது குடும்​பத்​தினர் அனை​வரும் கங்கை நதிநீரால் புனிதம் செய்யப்​பட்டு காவி உடை அணிந்து இந்து மத சடங்​கு​களில் பங்​கேற்​றனர். இந்த முடிவை விருப்​பப்​பட்டு எடுத்​துள்​ளனர். அதற்கு ஜாகிரின் மகன்​களும்​ ஆதர​வு அளித்​துள்​ளனர்​’’ என்​றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.