Electricity bill, AC electricity consumption : கோடைகாலம் வந்துவிட்டாலேஏசி அதாவது ஏர் கண்டிஷனரின் தேவையும் தவிர்க்க முடியாமல் வந்துவிடுகிறது. ஆனால் அதனுடன் மின்சார கட்டணமும் அதிகரிக்கிறது என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் 1 டன் ஏசியை தினமும் 8 மணி நேரம் பயன்படுத்தினால், அது உங்கள் பட்ஜெட்டில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
1 டன் ஏசி எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தும்?
நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு சாதாரண 1 டன் இன்வெர்ட்டர் ஏசி தினமும் சுமார் 8 யூனிட் மின்சாரம் பயன்படுத்துகிறது, இதன் விளைவாக ஒரு மாதத்தில் 240 யூனிட் வரை பயன்படுத்த அதிக வாய்ப்பு இருக்கிறது. அப்படி பார்க்கும்போது உங்களின் மின்சார கட்டணமும் கட்டாயம் அதிகரிக்கும். நீங்கள் இதை விட அதிக நேரம் ஏசியை இயக்கினால், உங்கள் மின்சார நுகர்வு அதிகரிப்பது மட்டுமல்லாமல் மின் கட்டணமும் டபுள் ஆகும். இதுபோன்ற சூழ்நிலையில், மின்சாரத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம்.
மின்சார நுகர்வு கணக்கீடு
பொதுவாக 1 டன் இன்வெர்ட்டர் ஏசி ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 1 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. அத்தகைய சூழ்நிலையில், அது ஒரு நாளைக்கு 8 யூனிட் மின்சாரத்தையும், ஒரு மாதத்தில் சுமார் 240 யூனிட்டுகளையும் நுகரும். மின்சார கட்டணம் யூனிட்டுக்கு ரூ.7 ஆக இருந்தால் (அது இடத்திற்கு இடம் மாறுபடலாம்), மொத்த மாதாந்திர செலவு ரூ.1,680 வரை இருக்கலாம். இருப்பினும், இந்த கட்டணம் ஏசியின் செயல்திறன், பயன்பாட்டு முறை மற்றும் அறை வெப்பநிலையையும் சார்ந்துள்ளது. இன்வெர்ட்டர் ஏசி சில சமயங்களில் மின்சாரத்தையும் மிச்சப்படுத்தும்.
போர்ட்டபிள் ஏசி
அதேநேரத்தில் போர்ட்டபிள் ஏசியும் மார்க்கெட்டில் மலிவு விலை காரணமாக அதிகமானோர் விரும்பி வாங்கும் ஒன்றாக இருக்கிறது. ஆனால், போர்ட்டபிள் ஏசியின் மிகப்பெரிய குறைபாடு என்னவென்றால், அதன் குளிரூட்டும் திறன் ஸ்பிளிட் அல்லது விண்டோ ஏசியை விட மிகக் குறைவு. இது சிறிய அறைகளுக்கு (90–120 சதுர அடி) மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், பெரிய அல்லது திறந்த அறைகளுக்கு அதை வாங்குவது சரியான தேர்வாக இருக்காது.
சிறிய ஏசிக்கள் சிறியதாக இருந்தாலும், அவை ஒப்பீட்டளவில் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகின்றன. இதன் ஆற்றல் திறன் ஸ்பிளிட் ஏசியை விட பலவீனமானது. இதன் பொருள் குறைந்த குளிரூட்டலுக்கு நீங்கள் அதிக மின்சாரக் கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும். சிறந்த குளிர்ச்சி, மின் கட்டணமும் குறைவாக இருக்க வேண்டும் என விரும்பினால், ஸ்பிளிட் அல்லது விண்டோ ஏசி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.