டெல்லி: 2024ம் ஆண்டு நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, தேசிய மருத்துவ ஆணையம் 14 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்தது, மேலும் 26 மாணவர்களை இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டது. நாட்டின் மருத்துவக் கல்வியின் உச்ச ஒழுங்குமுறை அமைப்பான தேசிய மருத்துவ ஆணையம் (NMC) இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு NEET UG வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ விசாரணை நடந்து வரும் நிலையில், கசிந்த வினாத்தாள்களைத் தீர்ப்பது மற்றும் தேர்வின் போது பிற […]
