RCB vs CSK: ஆர்சிபி அணிக்கு எதிரான தோல்வி! தோனி அடுத்த முக்கிய முடிவு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஆண்டு எதுவுமே சரியாக அமையவில்லை. பேட்டிங் நன்றாக விளையாடினாள் பௌலிங் சரியில்லை. பவுலர்கள் நன்றாக பந்து வீசினால் பேட்டிங்கில் சொதப்பல் ஏற்படுகிறது. இரண்டும் சரியாக இருந்தால் ஃபீல்டிங்கில் கேட்ச்களை தவற விட்டு போட்டிகளை தோற்று வருகின்றனர். இந்த சீசனில் இதுவரை இரண்டு வெற்றிகளை மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் பதிவு செய்துள்ளது. பெங்களூரில் நடைபெற்ற மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி பந்தில் தோல்வியடைந்தது. ஆயுஷ் மாத்ரே மற்றும் ஜடேஜா சிறப்பாக விளையாடியிருந்த நிலையிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்தது.

மேலும் படிங்க: மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வரலாறு படைத்த ரோகித், இதுவரை யாரும் செய்யாத சாதனை..!!

ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்திய சென்னை சில்க்ஸ் கிங் அணி கடந்த இரண்டு வருடங்களாக தோல்வியை சந்தித்து வருகிறது. 2024 மற்றும் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு போட்டியில் கூட ஆர்சிபி அணிக்கு எதிராக வெற்றி பெறவில்லை. நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றிருந்தால் ஆர்சிபி-யின் பிளே ஆப் கனவை சற்று யோசிக்க வைத்திருக்கலாம். ஆனால் கடைசி பந்தில் தோல்வி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றால் பிளே ஆப்பிற்கு தகுதி பெற வாய்ப்பு இருந்த நிலையில், ஆர்சிபி அதனை தட்டிச்சென்றது. அதற்கு பழி வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு ஒரு வாய்ப்பு இருந்த போதிலும் தவற விட்டுள்ளனர். இந்நிலையில் இந்த தோல்விக்கு நான் பொறுப்பு ஏற்கிறேன் என்று கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

கேப்டன் தோனி பேச்சு

போட்டி முடிந்த பிறகு பேசிய தோனி, “நான் பேட்டிங் செய்யத் தொடங்கியபோது, ​​தேவையான பந்து மற்றும் ரன்கள் இருந்த போதே அழுத்தத்தைக் குறைக்க இன்னும் சில ஷாட்களை அடித்து இருக்க வேண்டும் என்று நினைத்தேன். நான் பழியை ஏற்றுக்கொள்கிறேன். அவர்கள் நல்ல தொடக்கத்தைப் பெற்றனர், இடையில் நாங்கள் அதை பின்னுக்குத் தள்ளினோம், ஆனால் ரொமாரியோ ஷெப்பர்ட் அற்புதமாக விளையாடினார். பந்து வீச்சாளர்கள் என்ன பந்து வீசினாலும், அவரால் அதிகபட்ச ரன்களைப் பெற முடிந்தது. நாம் அதிக யார்க்கர்களைப் பயிற்சி செய்ய வேண்டும். பெரும்பாலும், பேட்டர்கள் ரன்கள் அடிக்க தொடங்கும்போது, ​​நீங்கள் யார்க்கர்களை நம்பியிருக்க வேண்டும். எனவே நீங்கள் ஒரு சரியான யார்க்கரைத் தேடுகிறீர்கள் என்றால், அது நடக்கவில்லை என்றால், ஒரு குறைந்த ஃபுல் டாஸ் போடுவது சிறந்த விஷயம்.

அடிக்க மிகவும் கடினமான பந்துகளில் இதுவும் ஒன்று. பதிரானா போன்ற ஒருவர், யார்க்கர் நடக்கவில்லை என்றால், அவருக்கு வேகம் உள்ளது. அவர் பவுன்சரை வீச முடியும் மற்றும் பேட்டர் யூகிக்க வைக்க முடியும். சில நேரங்களில் அவர் யார்க்கர்களைத் தேடுகிறார் என்றால், பேட்டர்கள் அதை அடிக்க விரும்புகிறார்கள், அவர் தவறவிட்டால், பேட்டர்கள் அடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதைப் பயன்படுத்தலாம், ஆனால் எல்லா பேட்டர்களும் ஸ்கூப் விளையாட வசதியாக இல்லை. அது இயல்பாக வந்தால், நிச்சயமாக முடியும். இல்லையென்றால், அது கடினமாகிவிடும். இன்றைய புதிய சகாப்தத்தில் நீங்கள் பயிற்சி செய்ய வேண்டிய ஒன்று. எங்கள் பேட்டர்களில் பெரும்பாலோர் பேடல் ஷாட்டை விளையாடுவதில்லை. ஜட்டு அதை விளையாடுகிறார், ஆனால் அவர் தரையில் மிகவும் வசதியாக இருப்பதால் அவர் தனது பலத்தை ஆதரிக்கிறார்” என்று தோனி கூறினார்.

மேலும் படிங்க: காதலில் விழுந்த ஷிகர் தவான்.. யார் இந்த சோஃபி ஷைன்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.